Tuesday, 7 August 2018

வங்கிகளால் அறிவிக்கப்படாத வராக்கடன் கடந்த நிதியாண்டில் ரூ3 லட்சம் கோடி என ஆய்வு


வராக்கடன்களால் வங்கிகளின் நிதி நிலை மோசமாகி வருகிறது. கடந்த நிதியாண்டில் வங்கிகளால் அறிவிக்கப்படாத வராக்கடன் மட்டும் சுமார் ரூ3 லட்சம் கோடி உள்ளதாக சிபில் ஆய்வில் தெரிவித்துள்ளது. இதில், இந்த வராக்கடன் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகளில் உள்ளவை. இவற்றில் பெரும்பாலானவற்றின் மீது நடவடிக்கை எதுவும் தொடங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மேற்கண்ட தகவல்கள் ரிசர்வ் வங்கிக்கும் இந்த ஆய்வு நிறுவனத்தால் பகிரப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் மார்ச் மாதம் வரை உள்ள வராக்கடன் விவரங்கள் இவை. வரும் செப்டம்பர் மாதத்தில் இதுகுறித்த விவரங்கள் வெளிடப்படலாம் என்றும், அதன்பிறகு ரிசர்வ் வங்கி விதிகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட வராக்கடன் ஒரே ஒரு வங்கி என்ற அளவில் மட்டுமே உள்ளது. ஆனாலும், இந்த கடன் மோசடி ஆசாமிகள் குறித்த விவரம் மற்றும் அவர்களின் தற்போதைய நிதி நிலை குறித்து அவர்களுக்கு கடன் அளித்த பிற வங்கிகளளுக்கு தெரியவில்லை. இதுதவிர, சுமார் ரூ6.6 லட்சம் கோடி கடன்களுக்கான தவணைகள் மிக தாமதமாக திரும்பி செலுத்தப்பட்டுள்ளன. இவை வராக்கடன் பட்டியலில் இணையவில்லை. இதுபோல் சில கடன்கள் வராக்கடன்களாக மாறக்கூடிய அபாயத்தில் இருக்கின்றன. குறித்த நேரத்தில் முறையாக திரும்பி ெசலுத்தப்படாத கடன்களில் சுமார் 15 சதவீதம் வராக்கடன்களாக மாறுகின்றன என்பது கடந்த கால வரலாறுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும், கடந்த நிதியாண்டில் முறையாக கடன்களை திரும்பி செலுத்தும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக உள்ளது என ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.வராக்கடன் தொடர்பான மேற்கண்ட அறிக்கையில், கடந்த மார்ச் மாதத்தின்படி வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் சுமார் ரூ54.2 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ10.4 லட்சம் கோடி வராக்கடன்களாக மாறியுள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ரூ2.4 லட்சம் கோடி அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.