*்!* தமிழக அரசின் புதிய தொழில் தொடங்குபவா்களை உருவாக்கும் நிறுவனமான இடிஐஐ புதிய தொழில் முனைவர்களை உருவாக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த வகையில், பிக்பாஸ் சீசன் 1 பட்டத்தை வென்ற போட்டியாளர் ஆரவை வைத்து விளம்பரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த விளம்பரத்தின் போஸ்டரில் ஆரவ் தோன்றுகிறார். இந்த போஸ்டரில் அவர் புகைப்படத்துடன் நீங்கள் தொழில் தொடங்கலாம். தொழிலாளியிருந்து முதலாளியாக மாற்ற எங்களுடன் கைகோர்த்து செயல்படுங்கள் என்று ஒரு வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இடிஐஐ நிறுவனத்தின் துணை இயக்குநர் கூறுகையில், '’இது போன்ற விளம்பரத்தால் அதிகமான இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த விளம்பரத்தின் நோக்கமே 2021ல் 50,000 மேற்பட்ட தொழில் முனைவோர்களைஉருவாக்குவதே ஆகும்’ என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.