இதுகுறித்து இந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி கிஷோர் காரத் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டில் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிகர வட்டி வருவாய் 23.81 சதவீதம் அதிகரித்து ₹1,807 கோடியாக உள்ளது. மொத்த வட்டி வருவாய் 13.45 சதவீதம் உயர்ந்து ₹4,692 கோடியாகவும் உள்ளது. வட்டி லாபம் 2.79 சதவீதத்தில் இருந்து 3.14 சதவீதமாக உயர்ந்துள்ளது. வட்டி அல்லாத வருவாய் ₹439.80 கோடி. வங்கியின் செயல் லாபம் 3.61 சதவீதம் உயர்ந்து ₹1,298 கோடியாகவும், நிகர லாபம் ₹209.31 கோடியாகவும் உயர்ந்துள்ளது. டெபாசிட்கள் 9.77 சதவீதம் உயர்ந்து ₹2,10,170 கோடியாகவும், காசா டெபாசிட்கள் (நடப்பு மற்றும் சேமிப்பு) 36.63 சதவீதத்தில் இருந்து 37.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த வராக்கடன் 7.20 சதவீதமாகவும், நிகர வராக்கடன் 3.79 சதவீதமாகவும் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.இந்தியன் வங்கியின் லாபம் அதிகரிப்புசென்னை: நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கையை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி கிஷோர் காரத் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டில் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிகர வட்டி வருவாய் 23.81 சதவீதம் அதிகரித்து ₹1,807 கோடியாக உள்ளது. மொத்த வட்டி வருவாய் 13.45 சதவீதம் உயர்ந்து ₹4,692 கோடியாகவும் உள்ளது. வட்டி லாபம் 2.79 சதவீதத்தில் இருந்து 3.14 சதவீதமாக உயர்ந்துள்ளது. வட்டி அல்லாத வருவாய் ₹439.80 கோடி. வங்கியின் செயல் லாபம் 3.61 சதவீதம் உயர்ந்து ₹1,298 கோடியாகவும், நிகர லாபம் ₹209.31 கோடியாகவும் உயர்ந்துள்ளது. டெபாசிட்கள் 9.77 சதவீதம் உயர்ந்து ₹2,10,170 கோடியாகவும், காசா டெபாசிட்கள் (நடப்பு மற்றும் சேமிப்பு) 36.63 சதவீதத்தில் இருந்து 37.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த வராக்கடன் 7.20 சதவீதமாகவும், நிகர வராக்கடன் 3.79 சதவீதமாகவும் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.