Thursday, 2 August 2018

ஆப்பிளை ஓரங்கட்டிய ஹூவெய்...

** ஒருகாலத்தில் ஸ்மார்ட்போன் சந்தையில் கொடிகட்டி பறந்த ஆப்பிள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் இயங்குதளம் அறிமுகமான பின்னர் ஆப்பிள் போன்களுக்கு போட்டியாக சாம்சங் நிறுவனம், சியோமி நிறுவனம் களமிறங்கியது. குறைந்த விலையில் நல்ல அமைப்புகளுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதே இந்த போட்டிக்கு காரணம். சியோமியை அடுத்து ஹூவெய், மோட்டோ, ஓப்போ, வீவோ போன்ற நிறுவனங்கள் போட்டிக்கு வந்தன. இந்நிலையில் ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் சீனாவைச் சேர்ந்த ஹூவெய் நிறுவனம் 5 கோடியே 42 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் மூன்றாம் காலாண்டில் 40 புள்ளி 9 சதவிகித வளர்ச்சி கண்டுள்ள அந்த நிறுவனம் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை முந்தியது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.