இதனால், வீடு,வாகன கடன்களுக்கான வட்டி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையை வெளியிடுகிறது. முன்னதாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் 6 பேர் குழு, கடந்த திங்கட்கிழமை முதல் ஆலோசனை நடத்தியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை உர்ஜித் படேல் நேற்று அறிவித்தார். இதில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நிதிக்கொள்கை சீராய்வு குழுவில் இருந்த 6 பேரில் 5 பேர் வட்டியை உயர்த்த பரிந்துரைத்துள்ளனர். அதன் அடிப்படையில் வட்டி உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு 6.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போவும் கால் சதவீதம் உயர்த்தி 6.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்எஸ்எப் எனப்படும், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கான வட்டி 6.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து 2வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 0.5 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி முன்பு 6 முறை வட்டியை குறைத்தது. கடைசியாக 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி கால் சதவீதம் குறைத்து 6 சதவீதமாக நிர்ணயித்திருந்தது. அதேநேரத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்வு பண வீக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வட்டி விகிதம் உயர்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 2ம் காலாண்டில் பண வீக்கம் 4.6 சதவீதமாகவும், 2ம் அரையாண்டில் 4.8 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது. ஏப்ரல் - செப்டம்பர் அரையாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் - 7.6 சதவீதம், நடப்பு நிதியாண்டில் இது 7.4 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அடுத்த சீராய்வு கூட்டம் அக்டோபர் 3ம் தேதி தொடங்குகிறது. ஏற்கெனவே சில வங்கிகள் கடன் மற்றும் டெபாசிட் வட்டியை உயர்த்தியுள்ளன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.