: ரூபாய் மதிப்பு 2வது நாளாக சரிந்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு ₹70ஐ தாண்டியது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று முன்தினம் 5 ஆண்டு இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்தது. வர்த்தக இடையில் ரூபாய் மதிப்பு ₹69.93 வரை சென்றது. துருக்கி - அமெரிக்கா இடையே ஏற்பட்ட மோதல் போக்கு இதற்கு முக்கிய காரணம். இதனால் துருக்கி லிரா மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் 45 சதவீதம் சரிந்து விட்டது. இதன் எதிரொலியாக உலக நாடுகளின் கரன்சி மதிப்புகளும் சரிந்தன. இந்திய ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 109 காசுகள் சரிந்து 5 ஆண்டில் இல்லாத அளவுக்கு குறைந்து விட்டது. 2வது நாளான நேற்றும் ரூபாய் மதிப்பு சரிந்தது. நேற்று வர்த்தக இடையில் அதிகபட்சமாக ₹70.10 வரை வீழ்ந்தது. இதுகுறித்து பொருளாதார விவகார செயலாளர் சுபாஷ் சந்த்ர கார்க் கூறுகையில், பிற நாட்டு கரன்சிகளின் மதிப்பு சரிந்ததை தொடர்ந்து, அதன் பாதிப்பாக ரூபாய் மதிப்பு சரிவு கண்டுள்ளது. வெளிப்புற காரணிகளால் இது நிகழ்ந்துள்ளது. இதனால் கவலை கொள்ள தேவையில்லை. ரூபாய் மதிப்பு ₹80ஆக சரிந்தாலும் கவலையோ, அச்சமோ வேண்டாம். ஏனெனில், பிற நாட்டு கரன்சிகளுக்கும் இதே நிலைதான். இந்த நிலை மாறும்போது சரியாகிவிடும். ரிசர்வ் வங்கியிடம் போதுமான அளவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. பிற நாட்டு கரன்சிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய கரன்சில வலுவாகவே இருக்கிறது என்றார்.* கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா - சீனா வர்த்தகப்போரால் சில மாதங்களாக ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது.* அமெரிக்கா - துருக்கி இடையேயான மோதல் போக்கால் ரூபாய் மதிப்பு நேற்று 2வது நாளாக சரிந்தது.* நடப்பு நிதியாண்டில் ரூபாய் மதிப்பு 6.7 சதவீதம் குறைந்துள்ளது.* இதனால் பெட்ரோல், மின் சாதன பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது.* தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் குறைந்தும் அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.