பெப்சி குளிர்பான நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உள்ள இந்திரா நூயி, வரும் அக்டோபர் மாதம் பதவி விலகுகிறார் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உலக அளவில் முன்னணியில் உள்ள பெப்சி குளிர்பான நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக (சிஇஓ) உள்ளவர் இந்திரா நூயி. சென்னையை சேர்ந்த இவர் கடந்த 12 ஆண்டுகளாக பதவியில் இருந்துள்ளார். இந்த நிறுவனத்தில் 24 ஆ்ண்டுகளாக பணியாற்றியுள்ளார். பெப்சி நிறுவனத்தின் முதலாவது பெண் சிஇஓ என்ற பெருமைக்குரியவர் இவர். தற்போது 62 வயதாகும் இந்திரா நூயி, வரும் அக்டோர் மாதம் 3ம் தேதி சிஇஓ பதவியில் இருந்து விலகுவதாக பெப்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், 2019 துவக்கம் வரை இவர் அந்த நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் நீடிப்பார். இந்த நிறுவனத்தில் ரமோன் ரகுவார்டா (22) சிஇஓ பொறுப்பை ஏற்க இருக்கிறார். பெப்சி நிறுவனத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்த நிறுவன பங்கு மதிப்பு சற்று சரிவை சந்தித்தது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.