Friday, 10 August 2018

விதிகளை மீறியதால் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க பேடிஎம்க்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

பேடிஎம் நிறுவனமும் விதி மீறலை ஒப்புக்கொண்டுள்ளது. பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கிடுகிடுவென உயர்ந்தன. குறிப்பாக, போதுமான இணையவசதி மற்றும் டெபிட்கார்டு பரிவர்த்தனைக்கான பாயின்ட் ஆப் சேல் கருவி இல்லாத இடங்களில் மொபைல் வாலட் நிறுவனங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வழி வகுத்தன. இதில் பேடிஎம் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் (கேஒய்சி) பெறுதல், சரிபார்த்தல் உள்ளிட்ட அதிகாரங்களை தனது தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்சுக்கு வழங்கியது. பேமன்ட் வங்கிக்கான உரிமம் பெற்ற பேடிஎம் வேறு நிறுவனத்துக்கு இந்த பணிகளை வழங்குவது விதி மீறல் என்பதை சுட்டிக்காட்டிய ரிசர்வ் வங்கி, இந்த நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கடந்த ஜூன் 20 முதல் தடை விதித்திருந்தது. இந்த குற்றச்சாட்டை பேடிஎம் ஒப்புக்கொண்டுள்ளது. அதேநேரத்தில், ஏற்கெனவே பேடிஎம் வாலட் மற்றும் வங்கி கணக்கு இணைத்திருப்பவர்கள் எந்த பிரச்னையும் இன்றி பயன்படுத்தலாம். குறைந்த கேஒய்சி தகவல்களை பூர்த்தி செய்தவர்கள், முழு தகவல்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. இதுபோல் விதிமுறைக்கு எதிராக பினோ பேமன்ட் வங்கி கணக்குகள் சிலவற்றில் உச்ச அளவான ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கூடுதல் தொகை இருந்ததால் இந்த வங்கிக்கும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.