Thursday, 2 August 2018

நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை

கடந்த ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தை 66 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். இதற்கு முந்தைய மாதம் இந்த எண்ணிக்கை 64.69 லட்சமாக இருந்தது. மொத்த ஜிஎஸ்டி நிகர வருவாய் கடந்த ஜூலை மாதத்தில் 96,483 கோடியாக இருந்துள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டியாக 15,877 கோடி, மாநில ஜிஎஸ்டி 22,293 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 49,951 கோடி, செஸ் வரியாக 8,362 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் இறக்குமதி மூலம் கிடைத்த 794 கோடியும் அடங்கும். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக 3,899 கோடி வழங்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. )சமீபத்தில் 88 பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்பட்டன. இது வரி வசூலில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என நிதியமைச்சகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.