டாடா குழுமத்தை சேர்ந்த நிறுவனம் டைட்டன். இந்த நிறுவனம் வாட்ச், நகை உள்ளிட்ட பல பிரிவுகளில் சில்லரை வர்த்தக தொழிலில் உள்ளது. இந்த நிறுவனத்தின் நகை பிரிவில் ஜிஎஸ்டி காரணமாக ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித் திருக்கிறது.
ஜிஎஸ்டி காரணமாக நடப்பு காலாண்டில் தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரூ.300 கோடி அளவுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என பிஎஸ்இ-க்கு அளித்த தகவலில் டைட்டன் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே பணமோசடி தடுப்பு சட்டம் (பிஎம்எல்ஏ) காரணமாக ஜூவல்லரி பிரிவு பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டி காரணமாக விற்பனையில் சரிவு ஏற்பட்டிருப்பதாக டைட்டன் தெரிவித்திருக்கிறது.
அதனால் பிஎம்எல்ஏ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். 50,000 ரூபாய்க்கு மேல் நகை வாங்கும் பட்சத்தில் அரசு ஆவணம் ஏதேனும் சமர்பிக்க வேண்டும் என்பது சட்டமாகும். ஆனால் இந்த தொகை மிகவும் குறைவு என்றும் இதில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் இந்த துறையினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
ஆனால் நிறுவனத்தின் வாட்ச் பிரிவின் விற்பனை வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்றும் டைட்டன் தெரிவித்திருக்கிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.