Monday, 2 October 2017

யூ டியூப் முதல் டியூஷன் வரை... பெண்களுக்கான எளிய தொழில் வாய்ப்புகள்! - ஜெ.சரவணன்

பெண்களும் ஆண்களுக்கு நிகராக சமமான இடத்தை எல்லா இடங்களிலும் பெற முடியும். இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய பெரிய நிறுவனங்களில் பெரும்பாலும் சி.இ.ஓ-வாக பெண்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் பெண்களில் பெரும்பாலானோர் இன்னமும் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடைக்கிறார்கள். அவர்கள், தங்களால் குடும்பத்துக்கு நிதியளவில் ஏதேனும் உதவியாக இருக்க முடியுமா எனச் சிந்திப்பவர்கள். அவர்களால் நிச்சயம் ஆண்களுக்கு நிகராகச் சம்பாதிக்க முடியும். 

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதில் திறமையானவர்கள் பெண்களே. அதிலும், வேலைக்குப் போகும் பெண்கள், வீடு, அலுவலகம் என இரண்டு இடங்களிலும் அனைத்தையும் சமாளிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், பெண்களின் திறமை, உழைப்பு எல்லாம் பெரும்பாலும் வீணாகிவிடுகின்றன. பெண்கள் நினைத்தால் தங்களுடைய திறமையைப் பயன்படுத்தி நன்றாகச் சம்பாதிக்கவும் முடியும். 

அதற்கு, உங்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் காணுங்கள்; அவற்றை எப்படி வருமானம் பார்க்கும் வகையில் மாற்ற முடியும் எனத் திட்டமிடுங்கள். வருமானமாக வரும் பணத்தை எப்படியெல்லாம் மேலும் பெருக்கலாம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். பெண்கள் செய்யக்கூடிய தொழில்வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.


ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதில் திறமையானவர்கள் பெண்களே. அதிலும், வேலைக்குப் போகும் பெண்கள், வீடு, அலுவலகம் என இரண்டு இடங்களிலும் அனைத்தையும் சமாளிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், பெண்களின் திறமை, உழைப்பு எல்லாம் பெரும்பாலும் வீணாகிவிடுகின்றன. பெண்கள் நினைத்தால் தங்களுடைய திறமையைப் பயன்படுத்தி நன்றாகச் சம்பாதிக்கவும் முடியும். 

அதற்கு, உங்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் காணுங்கள்; அவற்றை எப்படி வருமானம் பார்க்கும் வகையில் மாற்ற முடியும் எனத் திட்டமிடுங்கள். வருமானமாக வரும் பணத்தை எப்படியெல்லாம் மேலும் பெருக்கலாம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். பெண்கள் செய்யக்கூடிய தொழில்வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம். 

1.ட்யூஷன் க்ளாஸ்:

நீங்கள் நன்றாகப் படித்துத் தேர்ந்தவர்கள் என்றால், உங்களால் அதைப் பிறருக்குக் கற்றுத்தர முடியுமென்றால் நிச்சயம் நீங்கள் ஒரு ட்யூஷன் சென்டரை ஆரம்பிக்கலாம். அதிகம் தேவையெல்லாம் ஒரு மொட்டைமாடியும் ஒரு கரும்பலகையும்தான். ஆனால், எல்லோரையும்போல சாதாரணமான ட்யூஷனாக இல்லாமல் வித்தியாசமாகச் செய்ய வேண்டும். படிப்பை மட்டுமே சொல்லித்தரமால் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் சுயமாகச் சிந்திக்கத்தூண்டும் சில அம்சங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு விளையாட்டுகளை அறிமுகப்படுத்த வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் விரும்பி வருவார்கள்.

2) யூடியூப் சேனல்:

பெண்கள் பலரும் யூடியூப் சேனலில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். நன்றாகச் சமைப்பவர்கள் சமையல் குறிப்பு வீடியோக்களையும், ஒப்பனைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அழகுக் குறிப்புகளையும், குழந்தை வளர்ப்பில் தேர்ந்தவர்கள் குழந்தை வளர்ப்பு தொடர்பான குறுப்புகளையும் வீடியோக்களாகப் பதிவிட்டு, யூடியூப் சேனல்கள் ஆரம்பித்து யார் வேண்டுமானாலும் கலக்க முடியும். தேவையெல்லாம் கூகுள் அக்கவுன்ட்டும் நல்ல கேமரா திறன்கொண்ட மொபைலும்தான்.

யூடியூப்

3) டேட்டா என்ட்ரி மற்றும் காப்பி பேஸ்ட்:

இணையதளங்களில் காப்பி-பேஸ்ட் வேலைகள் நிறையவே உள்ளன. அவற்றை வீட்டிலிருந்தே செய்வதன் மூலம் கணிசமாகச் சம்பாதிக்க முடியும். அவர்கள் சொல்லும் இணையதளத்தின் லிங்க்கை ஓப்பன் செய்து, அந்த லிங்க்கை காப்பி செய்து அவர்களுடைய இன்டர்ஃபேஸில் பேஸ்ட் செய்தால் போதும். உங்களுக்கு நன்றாக டைப்பிங் செய்ய வருமென்றால், வீட்டில் ஓய்வு நேரத்தில் டைப்பிங் செய்து வருமானம் ஈட்டலாம்.  


Advertisement


4. ஃபேன்சி ஸ்டோர்:

உங்களுக்கு நல்ல விற்பனை அறிவும் ஆர்வமும் இருந்தால் ஃபேன்சி ஸ்டோர் வைக்கலாம். ஃபேன்சி பொருள்கள் எங்கிருந்து மலிவாக வாங்கலாம் என்பதைத் தெரிந்துகொண்டு, அங்கிருந்து வாங்கி வீட்டின் அருகே சிறிய கடை அமைத்து விற்பனை செய்யலாம். ஃபேன்சி பொருள்களை சென்னை பாரிமுனையில் மொத்தமாக வாங்கலாம்.  

இப்படி பல வழிகளில் பெண்கள் சம்பாதிக்கலாம் என்றாலும், சம்பாதித்தப் பணத்தை எப்படிப் பெருக்குவது எனத் தெரியாவிட்டால், வரும் வருமானம் போகும் இடம் தெரியாமல் போய்விடும். தங்களுடைய சம்பாத்தியத்தை எப்படியெல்லாம் திட்டமிட்டுப் பெருக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பணம்முதலீட்டில் வயது மிகவும் முக்கியம். அதாவது முதலீட்டுக் காலம் முக்கியம். நீங்கள் எவ்வளவு விரைவில் முதலீடு செய்ய தொடங்குகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களின் இலக்குகளை விரைவில் அடையலாம். கணவரது வருமானம் குடும்பச் செலவுகளுக்கு உதவுகிறது எனில், குடும்பத்தின் சில அவசியமான அவசரமான பணத் தேவைகளில் உங்களது முதலீடானது பேருதவியாக இருக்கும். 

ஆனால், வருமானத்தை வீட்டில் ஒளித்துவைக்க வேண்டாம். டிமானிட்டைசேஷன் நடவடிக்கையை மறந்திருக்க மாட்டீர்கள். எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே வங்கி, அஞ்சலகம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுடைய முதலீட்டு முடிவுகளை கணவருடன் ஆலோசித்து எடுங்கள். பணத்தைக் கையாள்வதில் கணவர் திறமையானவராக இல்லையெனில், நீங்களே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். 

வங்கி, அஞ்சலகம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய மூன்றிலும் இருக்கும் அனைத்து முதலீட்டுத் திட்டங்களையும் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய தேவையைப் பொறுத்து முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுங்கள். முதலீட்டாளர் விழிப்புஉணர்வு முகாம்கள் அல்லது கூட்டங்களில் முடிந்தவரை பங்கேற்க முயற்சிசெய்யுங்கள். 

வருமானம், சேமிப்பு மற்றும் முதலீடு இவை மூன்றைப் பற்றியும் நீங்கள் ஒரு தெளிவுக்கு வந்துவிட்டால், உங்களால் விண்ணையும் தொட முடியும் பெண்களே!


No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.