இந்தியாவிலேயே தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம் முதல்வரின் பரிசீலனையில் உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றது முதல், கல்வித்துறையில் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்து வருகிறார். மாணவர்களுக்கு சீருடை மாற்றம், ஸ்மார்ட் வகுப்பறைகள், பாடத்திட்டத்தில் மாற்றம், நீட் உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு கையேடு புத்தகம் என பல்வேறு சீர்திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், திருச்சியில் இன்று (அக்டோபர் 14) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், நாட்டிலேயே முதல் முறையாகப் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இந்தத் திட்டம் தற்போது முதல்வர் பழனிசாமியின் பரிசீலனையில் உள்ளது.
அதேபோல், பள்ளி மாணவர்களுக்கு டிசம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். ஸ்மார்ட் கார்டுடன் மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டமும் கொண்டு வரப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவது என்ற கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
This comment has been removed by the author.
ReplyDelete