சுமார் 66 சதவிகித தொழில் நிறுவனங்கள் ஜூலை மாதத்துக்கான வரி ரிட்டன்களைக் கால அவகாசத்துக்குள் தாக்கல் செய்துள்ளன.
ஜூலை மாதத்துக்கான ஜி.எஸ்.டி. ரிட்டன்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 10ஆம் தேதி நீட்டிக்கப்பட்டிருந்தது. வரி விதிப்புக்கு உட்பட்டவர்களில் 66 சதவிகிதப் பேர் தங்களின் விற்பனை குறித்து விரிவான ரிட்டன்களைத் தாக்கல் செய்துள்ளனர். வரி விதிப்புக்குரிய நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 65 லட்சமாகும். அதில் சுமார் 42 லட்சம் நிறுவனங்கள் ஜூலை மாதத்துக்கான ரிட்டன்களை அக்டோபர் 10ஆம் தேதி மாலை ஆறு மணி வரையில் தாக்கல் செய்துள்ளன. ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 10 நள்ளிரவுடன் முடிந்தது.
ஜூலை மாதத்துக்கான ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. அறிவிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் வரி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்படவில்லையென்றால், உள்ளீட்டு வரிக் கடன் பெறுவதில் அவர்கள் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதி வரையில் 30 லட்சம் ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதிக்குப் பிறகு சுமார் 13 லட்சம் ரிட்டன்கள் கூடுதலாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.