Monday, 2 October 2017

வீட்டு கடனுக்கான வட்டியில் குறைப்பு.. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு.!

ஆந்திர வங்கி, பாங்க் ஆஃப் பரோடா வங்கிகளை தொடர்ந்து நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தில் 5 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.

இப்புதிய வட்டி விகிதம் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

ரிசர்வ் வங்கி

அடுத்த சில நாட்களில் ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ள நிலையில் முன்கூட்டியே வீட்டி கடனுக்கான வட்டி குறைப்பை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள படி தற்போது இருக்கும் 9 சதவீத வரி விதிப்பு 5 அடிப்படை புள்ளிகள் குறைந்து 8.15 புள்ளிகளாக இருக்கும் தெரிவித்துள்ளது.

இப்புதிய மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

பிற வங்கிகள்

கடந்த வாரமம் ஆந்திர வங்கி 9.70 சதவீதமாக இருந்த வீட்டு கடனுக்கான வட்டியை 9.55 சதவீதமாக குறைத்தது. இதனை தொடர்ந்து 9.50 சதவீதத்தில் இருந்து 9.15 சதவீதமாக குறைத்தது.

இதுவும் அக்டோபர் முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவித்துள்ளது.

லாபம்

இப்புதிய வட்டி குறைப்புகள் ஏப்ரல் 1, 2016ஆம் ஆண்டுக்கு முன் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 அடிப்படை புள்ளிகள் குறைப்பு என்பது சிறியதாக இருந்தாலும், மாத தவணையில் கணிசமான அளவிற்கு சேமிக்க முடியும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.