Friday, 6 October 2017

Mutual Fund: தேர்ந்தெடுப்பது எப்படி?

ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் பார்த்தால் Mutual Fund எண்ணிக்கை பத்துக்குள்ளாகவே இருக்கும். ஆனால் இப்பொழுது நூறைத் தாண்டியிருக்கும். இதில் ஒன்றை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதைப் பற்றி தான் இந்த பதிவு.

யப்பா..இத்தனை Mutual Fund ஆஆஆ?

முதலில் நிறைய ஏஜெண்ட்கள் சொல்வதை அப்படியே நாம் நம்ப வேண்டாம். அவர்கள் சொல்லிய கருத்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை இணையத்தில் உள்ள தளங்களில் நல்ல சரி பார்த்து கொள்ளுங்கள்.

Mutual Fundல் உறுதியாக நிலையான வருமானம் கிடைக்கும் என்று. கண்டிப்பாக எதிர்பார்க்க வேண்டாம். இதுவும் ஒரு வகையில் பங்கு சந்தை சார்ந்த முதலீடே. அதனால் சந்தைக்கேற்ப லாபங்களும் மாறலாம்.

அதன் பிறகு உங்கள் தேவை என்ன என்பதை தெளிவுபடுத்தி கொள்ளுங்கள். ஒருவர் வருடத்திற்கு 50% கூட லாபம் எதிர் பார்க்கலாம். ஆனால் அதற்கான "RISK" பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். சில சமயங்களில் 50% குறையவும் செய்யலாம்.

அதனால் உங்களை நோக்கம் என்ன என்பதை கீழ்க்கண்டவாறு பட்டியலிடுங்கள்.

1) லாபம்:
குறைந்த லாபம் (1௦~15%)
இவர்களுக்கு ஏற்றது "Debt Fund"

மத்திம லாபம் (20~25%)
இவர்களுக்கு ஏற்றது "Balanced Fund"

அதிக லாபம் (30~35%)
இவர்களுக்கு ஏற்றது "Bluechip fund", "Index Fund" மற்றும் "Midcap fund"

3) பயன்
வரி சேமிப்புக்கு?
"ELSS Tax Saving Funds" தேர்ந்தெடுக்க.

வழமையான வருமானம் (regular income)?
"Dividend" முறையைத் தேர்ந்தெடுக்க.

நீண்ட கால திட்டமிடல்?
"Growth" முறையைத் தேர்ந்தெடுக்க.

2) காலம்:
நீண்ட காலம்(,10 வருடம்)
இவர்கள் கொஞ்சம் RISK எடுக்கலாம். காலத்தோடு சேர்ந்து RISK சமநிலைப்படுத்தப்படும்..

மத்திம காலம்(,5 வருடம்)
இவர்கள் "Medium RISK" எடுக்கலாம்.

குறுகிய காலம், (2~3 வருடம்)
இவர்கள் குறைந்த RISK எடுக்கலாம்.

4)எப்படி கட்டப் போகிறீர்கள்?
ஒரே தவணை
இதற்கு "Long term saving fund" தேர்ந்தெடுக்கலாம்.

மாதந்தோறும்
இதற்கு "Systemtic Investment Plan (SIP)" தேர்ந்தெடுக்கலாம்

இப்பொழுது எந்த வகை "Mutual Fund" வாங்கலாம் என்று முடிவு எடுத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆனால் ஒவ்வொரு வகையிலும் பல வங்கிகள், பல நிறுவனங்கள் "Mutual Fund" வெளியுட்டள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.