Monday, 2 October 2017

தேசிய சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

நடப்பு, அக்., – டிச., வரை­, தேசிய சிறு சேமிப்பு திட்­டங்­களில் வழங்­கப்­படும் வட்டி விகி­தத்­தில் மாற்­றம் இல்லை’ என, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.பொது சேம­நல நிதி, கிசான் விகாஸ் பத்­தி­ரம், சுகன்ய சம்­ரிதி உள்­ளிட்ட, தேசிய சேமிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்டி விகி­தங்­கள், 2016 ஏப்., முதல், காலாண்­டுக்கு ஒரு­முறை சீராய்வு செய்­யப்­ப­டு­கின்­றன. ஜூலை – செப்., வரை­ உள்ள, தேசிய சேமிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்டி விகி­தம், டிச., வரை­யி­லான காலாண்­டுக்­கும் தொட­ரும். தற்­போது, பொது சேம­நல நிதி­யில் மேற்­கொள்­ளும் முத­லீட்­டிற்கு, 7.8 சத­வீ­தம் ஆண்டு வட்டி வழங்­கப்­ப­டு­கிறது. இது, 115 மாதங்­கள் முதிர்ச்சி காலத்தை கொண்ட, கிசான் விகாஸ் பத்­தி­ரத்­திற்கு, 7.5 சத­வீ­த­மாக உள்­ளது.சுகன்ய சம்­ரிதி திட்­டம் மற்­றும் மூத்த குடி­மக்­க­ளின் சேமிப்பு திட்­டத்­திற்கு, முறையே, 8.3 சத­வீ­தம் வட்டி வழங்­கப்­ப­டு­கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.