Monday, 2 October 2017

செபியின் புதிய அறிவிப்பு

பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லிட்­டுள்ள நிறு­வ­னங்­கள், வங்­கி­களுக்கு திரும்­பச் செலுத்த தவ­றிய கடன் விப­ரங்­களை அளிக்­கும் நடை­மு­றையை, மறு அறி­விப்பு வரும் வரை, ஒத்தி வைத்­துள்­ள­தாக, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு ஆணை­ய­மான, ‘செபி’ தெரி­வித்து உள்­ளது.

கடந்த மாதம், ‘செபி’ அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது. அதில், ‘பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வ­னங்­கள், வங்­கி­கள் மற்­றும் நிதி நிறு­வ­னங்­களில், கடன் பெற்று திரும்ப அளிக்­காத பட்­சத்­தில், அது குறித்த விப­ரங்­களை, திரும்­பச் செலுத்த தவ­றிய, 24 மணி நேரத்­திற்­குள், பங்­குச் சந்­தை­க­ளுக்கு தெரி­விக்க வேண்­டும்’ என, தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.இந்த நடை­முறை, அக்., 1 முதல், அம­லுக்கு வரும் என­வும் அறி­விக்­கப்­பட்டு இருந்­தது.வாராக்கடன்இந்­நி­லை­யில் நேற்று, ‘செபி’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை:பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வ­னங்­கள், கடனை திரும்­பச் செலுத்த தவ­றிய விப­ரங்­களை அளிக்­கும் நடை­முறை, அக்., 1 முதல், அம­லுக்கு வர இருந்­தது.இந்­நி­லை­யில், இந்த திட்ட அம­லாக்­கத்தை நிறுத்தி வைக்க, முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. மறு அறி­விப்பு வரும் வரை, இத்­திட்­டம் ஒத்தி வைக்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.வங்­கி­க­ளின் வாராக்­க­டன், 8 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளதை அடுத்து, அதை கட்­டுக்­குள் கொண்டு வர, ரிசர்வ் வங்­கி­யும், மத்­திய அர­சும் பல்­வேறு முயற்­சி­கள் மேற்­கொண்டு உள்­ளன.இந்­நி­லை­யில், பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லிட்­டுள்ள, நிறு­வ­னங்­க­ளின் வாராக்­க­டன் விப­ரங்­களை, பங்கு முத­லீட்­டா­ளர்­களும், அவ்­வப்­போது அறிந்து கொள்ள வேண்­டும் என, ‘செபி’ முடிவு செய்­துள்­ளது.இதன் தொடர்ச்­சி­யாக தான், பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லிட்­டுள்ள, அனைத்து நிறு­வ­னங்­களும், திரும்ப செலுத்­தாத கடன் விப­ரங்­களை அளிக்­கும் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்த முடி­வெ­டுத்து உள்­ளது.தாமதம்தற்­போது, பங்­குச் சந்தை பட்­டி­ய­லில், ஒரு நிறு­வ­னம் இடம் பெற வேண்­டு­மென்­றால், கடன் பத்­தி­ரங்­கள் மீதான வட்டி அல்­லது அசலை திரும்­பத் தரு­வ­தில் ஏற்­பட்­டுள்ள தாம­தம் குறித்த தக­வலை தெரி­விக்க வேண்­டும்.எனி­னும், வங்­கி­கள் மற்­றும் நிதி நிறு­வ­னங்­க­ளி­டம் பெற்­று உள்ள கடன், திரும்­பத் தராத கடன் போன்ற விப­ரங்­கள் கோரப்­ப­டு­வ­தில்லை.தற்­போது, இந்த விப­ரங்­க­ளை­யும், அதற்­கென உள்ள படி­வத்­தில் தாக்­கல் செய்­வதை கட்­டா­ய­மாக்க, ‘செபி’ திட்­ட­மிட்டு உள்­ளது.ஜூலை­யில், பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள வங்­கி­க­ளுக்கு, ‘செபி’ அறிக்கை ஒன்றை அனுப்பி இருந்­தது.அதில், ‘ரிசர்வ் வங்கி மதிப்­பீடு செய்த வாராக்­க­டன், வங்­கி­யின் நிதி­நிலை அறிக்­கை­யில், 15 சத­வீ­தத்­திற்கு மேல் இருந்­தால், அது குறித்த விப­ரங்­களை தெரி­விக்க வேண்­டும்’ என, கோரப்­பட்­டி­ருந்­தது.இதன் மூலம், ஒரு வங்­கி­யின் ஆண்டு நிதி­நிலை அறிக்கை வெளி­யா­கும் போதே, வாராக்­க­டன் குறித்­தும் அறிந்து, அதற்­கேற்ற நட­வ­டிக்­கையை, ரிசர்வ் வங்கி எடுக்க முடி­யும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.