Wednesday, 4 October 2017

பணப்பரிமாற்றதை எளிதாக்கும் Xoom

இந்தியாவிற்கான பணப்பரிவர்த்தனை அளவுகளை உயர்த்தியுள்ளதன் வழியாக, தலைமைத்துவ நிலையை வலுப்படுத்தியுள்ள Xoom, ஒரு பரிவர்த்தனையில் $10,000 வரை அனுப்ப வழி வகை செய்துள்ளது.

பேபாலின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையன Xoom, உயர் அனுப்புதல் அளவுகளுடன், மேம்படுத்தப்பட்ட எக்ஸ்சேஞ்ச் விகிதங்களை அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது. வாடிக்கையாளர்கள் தற்போது $10,000 USD வரை ஒரு பரிவர்த்தனையில் அனுப்பலாம். இது இந்தியர்களுக்கு ஒரு பரிவர்த்தனையில் அதிகப்பணம் அனுப்பும் தேர்வினை வழங்குவதன் வழியாக கடன் செலுத்தல்கள், தனிநபர் முதலீடுகள், கல்விக்கடன் செலுத்தல்கள் அல்லது தாய்நாட்டிலுள்ள குடும்பங்களுக்கு உதவுகதை மேற்கொள்வதை சாத்தியமாக்குகிறது. 

Xoom உடன் எந்த அளவிற்கு நீங்கள் அதிகம் அனுப்புகிறீர்களோ அந்த அளவிற்கு சிறந்த எக்ஸ்சேஞ்ச் மதிப்பு உங்களுக்கு கிடைக்கும். இந்தியாவிற்கான Xoom - ன் நடப்பு சேவை வழங்குவதை இது மேலும் மேம்படுத்துகிறது. 

“Xoom உயர் பரிவர்த்தனை அளவுகள், மேம்படுத்தப்பட்ட எக்ஸ்சேஞ்ச் மதிப்புகள் மற்றும் வேகமான வங்கி வைப்புகள் வழியாக, ஒவ்வொரு டச்பாயிண்டையும் எங்களது இந்திய வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்கதாக மாற்றியுள்ளது” என்று கூறுகிறார், Xoom துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் ஜுலியன் கிங்.

பியூ ஆய்வின் படி, 2015 - ல், யுஎஸ்ஏவிலிருந்து இந்தியாவிற்கு கூ12 பில்லியன் யுஎஸ் டாலர்கள் வரை அனுப்பப்பட்டுள்ளது. முதன்மையாக, யுஎஸ்ஸிலுள்ள இந்திய புலம்பெயர்ந்தோர், தங்களது தாய்நாட்டிலுள்ள முதலீட்டு வாய்ப்புகளை கைபற்றும் வகையில் இது மேற்கொள்ளப்படுகிறது. 

“இந்தியாவிற்கு பணம் அனுப்பும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு உயர் அனுப்புதல் அளவுகள் மற்றும் நல்ல எக்ஸ்சேஞ்ச் விகிதங்கள் மிகவும் முக்கியம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். எனவே இவ்விரண்டு தேவைப்பாடுகளையும் ஈடேற்றும் வகையில் செயலாற்றுகிறோம். Xoom வாடிக்கையாளர்கள் இனி, மேம்பட்ட எக்ஸ்சேஞ்ச் விகிதங்கள் மற்றும் வேகமான டெபாசிட்கள் இடையில் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமின்றி இரண்டையும் அனுபவிக்கலாம். மேலும், ஒரு பரிவர்த்தனையில் $10,000 வரை அனுப்பும் தேர்வும் அவர்களுக்கு கிடைக்கிறது” என்று கூறுகிறார், Xoom-ன் தெற்காசிய சந்தையாக்கல் மேலாளர் நாஸர் அகர்போட்டா.

“நான் பல ஆண்டுகளாக Xoom பயன்படுத்தி வருகிறோம் மற்றும் அதன் சேவைகளின் வழியாக மிகுந்த மகிழ்ச்சி மற்றும் திருப்தியடைந்துள்ளோம். இதன் புதிய உயர் அனுப்புதல் அளவுகள், அதிகப்படியான தொகையை தேவைக்கு ஏற்ப அனுப்பும் நெகிழ்வு தன்மையை எனக்கு அளிக்கிறது. அதன் மேம்பட்ட எக்ஸ்சேஞ்ச் விகிதங்களுடன், மிகச்சிறந்த எக்ஸ்சேஞ்ச் மதிப்புகள் மற்றும் வேகமான பதிவுகள் அடங்கிய சிறந்த கலவையைக் கொண்டுள்ளது” - என்கிறார் நியூயார்க்கை சேர்ந் சிவாங்கு மிஷ்ரா.

Xoom குறித்து: ஒரு பேபால் நிறுவனமாகத் திகழும் Xoom முன்னணி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை வழங்குனராக, நுகர்வோர்கள் பணம் அனுப்புதல், பில்களை செலுத்ததல் மற்றும் மொபைல் ரீலோடுகளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உலகம் முழுவதும் பாதுகாப்பான, வேகமான மற்றும் குறைவான-செலவீனம் கொண்ட வழியில், தங்களது மொபைல் ஃபோன், டேப்ளெட் அல்லது கணிணி வழியாக மேற்கொள்வதை ஏதுவாக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் தலைமையகம் சான் ஃபிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது மற்றும் ஆன்லைனில் பார்வையிட www.xoom.com .


Vetrikodikattucommerce

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.