இந்த தொழிலுக்கு முதலீடு தேவைஇல்லை. பெரிய அளவு இடவசதியோ அல்லது ஆட்களோதேவை இல்லை. லாபம் என்று கைக்கு வரும்என ஏங்க வேண்டியதில்லை. ஆனால் மாதவருமானம் எப்படியும் ஐந்து இலக்கங்களைதாண்டும்.
லட்சங்களில் பணம் போட்டு, ஆட்கள்கிடைக்காமல், சில நேரங்களில் வேலைஇல்லமால், அரசாங்க அலைச்சல், வரி என்றுநொந்து நூடில்ஸ் ஆகி வருடத்திற்கு 20% அளவுவருமானம் பார்ப்பது குதிரைக்கொம்பானஇந்த காலத்தில் இப்படி ஒரு தொழிலா என்றுகேட்காதீர்கள்.
இப்படி ஒரு அருமையான தொழிலின் பெயர்நகை கடன். அதிகபட்ச செலவு, பெயர் பலகைமட்டுமே. இந்த தொழில் நடத்த பதிவு எண்வாங்கிய பின், ஏதாவது ஒரு கூட்டுறவுவங்கியின் மேலாளர் அல்லது பணியாளர், இல்லை என்றால் ஏதாவது ஒரு சிறிய அரசுவங்கி ஊழியர் ஒருவரை கைக்குள்வைத்துக்கொள்வது.
இனி அடகுக்கு வரும் நகைகளை வாங்கி, வாடிகையாளர்களுக்கு பணம் குடுக்கவேண்டும். பிறகு தினமும் வரும் நகைகளைஎடுத்துக்கொண்டு, நேராக நம் வங்கிஊழியர்களை அணுகி, அதே நகைகளைகுறைந்த வட்டிக்கு வங்கிகளில் வைக்கவேண்டும்.
பொதுவாக தனியார் குடுப்பதை காட்டிலும், ஒரு கிராம் தங்கத்திற்கு வங்கிகள் குடுக்கும்விலை அதிகம். ஆகவே உங்களுக்குகிடைக்கும் அடகு பணம் அதிகம். வட்டி மிகவும்குறைவு. அதே நேரத்தில் நகைகளைபாதுகாப்பாக வைக்க, வங்கிகள் பெட்டக பாதுகாப்பு வசதி , உங்கள் வரவு, செலவுவேலையை வங்கி ஊழியர்பார்த்துக்கொள்கிறார். அதற்கு சம்பளம் கூடசம்பந்தப்பட்ட வங்கிகளேபார்த்துக்கொள்கின்றன.நகைகளை திருப்பிமீட்க, வைக்க, இந்த வேலைக்கு மட்டுமேஉங்களுக்கு ஆள் தேவை.
இப்படி லம்ப்பாக ஒரே ஒருவர் மூலம் வேலைமுடிவதால், சிறு வாடிக்கையாளர்களை, அதேவங்கி ஊழியர்கள் பைசாவுக்கு கூடமதிப்பதில்லை. கடன் வழங்கும் நேரத்தைகாட்டிலும் ஐந்து நிமிடம் தாமதமாக வந்தால்சாமானியனுக்கு கடன் இல்லை. ஆனால்அவர்களின் மதிப்பு மிக்க வட்டி கடைவாடிக்கையாளர் அரைமணி நேரம் தாமதமாகவந்தாலும் ஸ்பெஷல் கவனிப்பு உண்டு.
ஆகவே இப்படி ஒரு அருமையான முதலீடுஇல்லாத, மரியாதை நிறைந்த வருமானவாய்ப்பை நாம் ஏன் தவற விட வேண்டும்??
This comment has been removed by the author.
ReplyDelete