உலகின் மிகப் பிரபலமான அரோடான் கேப்பிடல் குளோபல் ரேங்கிங் நிறுவனம் தனது அன்மை பதிப்பில் உலக நாடுகளின் பாஸ்போர்ட் பற்றிய குறியீட்டை வெளியிட்டுள்ளது.
இந்தக் குறியீடு விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு எளிதாகச் சென்று வர இயலும் என்பதைப் பொறுத்துப் பாஸ்போர்ட் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் இங்கு இங்கு இந்திய பாஸ்போர்ட்டின் நிலை என்ன, உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள் எவை, மோசமான பாஸ்போர்ட்டுகள் எவை என்று இங்குப் பார்ப்போம். இந்திய பாஸ்போர்ட் உலக நாடுகளின் பாச்போர்ட்களுடன் ஒப்பிடும் போது இந்திய பாஸ்போர்ட் 78 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் இருந்து விசா இல்லாமல் 46 நாடுகளுக்கு எளிதாகச் சென்று வர இயலும்.
முதல் இடம் 157 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வரும் சேவையை ஜெர்மனியின் பாஸ்போர்ட் அளிக்கின்றது.
இதனால் ஜெர்மனி பாஸ்போர்ட் முதல் இடத்திலும், தென் கொரியாவை முந்தி 156 மதிப்பென் பெற்று ஆசியாவில் இர்ந்து சிங்கப்பூர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான் குறைவான சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டாகப் பார்க்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் பயன்படுத்தி விசா இல்லாமல் 23 நாடுகளுக்குச் செல்லமுடியும்.
டாப் 10 சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள் (பகுதி-1)
1. ஜெர்மனி | விசா இலவச மதிப்பெண்: 157 2. சிங்கப்பூர், ஸ்வீடன் | விசா இலவச மதிப்பெண்: 156 3. டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், சுவிச்சர்லாந்து, நார்வே, பிரிட்டன், அமெரிக்கா | விசா இலவச மதிப்பெண்: 155 4. இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, லக்சம்பர்க், போர்ச்சுக்கல், ஜப்பான் | விசா இலவச மதிப்பெண்: 154 5. மலேஷியா, அயர்லாந்து, கனடா, நியூசிலாந்து | விசா இலவச மதிப்பெண்: 153
டாப் 10 சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள் (பகுதி-2)
6. கிரீஸ், தென் கொரியா, ஆஸ்திரேலியா | விசா இலவச மதிப்பெண்: 152 7. செக் குடியரசு, ஐஸ்லாந்து | விசா இலவச மதிப்பெண்: 151 8. ஹங்கேரி | விசா இலவச மதிப்பெண்: 150
டாப் 10 சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள் (பகுதி-3)
9. மால்டா, போலந்து | விசா இலவச மதிப்பெண்: 149 10. ஸ்லோவேனியா, ஸ்லோவாகியா, லிதுவேனியா, லாட்வியா | விசா இலவச மதிப்பெண்: 148 குறைவான மதிப்பு வாய்ந்த பாஸ்போர்ட் உள்ள நாடுகள் (பகுதி-1)
1. ஆப்கானிஸ்தான் | விசா இலவச மதிப்பெண்: 23 2. பாக்கிஸ்தான் | விசா இலவச மதிப்பெண்: 26 3. ஈராக் | விசா இலவச மதிப்பெண்: 28 4. சிரியா | விசா இலவச மதிப்பெண்: 29 5. சோமாலியா | விசா இலவச மதிப்பெண்: 30 குறைவான மதிப்பு வாய்ந்த பாஸ்போர்ட் உள்ள நாடுகள் (பகுதி-2)
6. தெற்கு சூடான், எதோப்பியா | விசா இலவச மதிப்பெண்: 34 7. இலங்கை, வங்காளம் | விசா இலவச மதிப்பெண்: 35 8. ஈரான், எரித்திரியா, சூடான் | விசா இலவச மதிப்பெண்: 36 குறைவான மதிப்பு வாய்ந்த பாஸ்போர்ட் உள்ள நாடுகள் (பகுதி-3)
9. பாலஸ்தீன பிரதேசங்கள், நேபால், லிபியா | விசா இலவச மதிப்பெண்: 37 10. லெபனான் | விசா இலவச மதிப்பெண்: 38.
Saturday, 7 October 2017
இந்திய பாஸ்போர்ட் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று தெரியுமா..?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.