Sunday, 8 October 2017

80C முதலீடுகள் என்னவென்று தெரியுமா..?

இந்த விதியின் கீழ் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் வரை அனுமதிக்கப்பட முதலீடுகள் செய்து கொள்ளலாம்.
இதில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகள் கீழே உள்ளது.

PPF : இது 15 வருட கால முதலீடு. 8.5% வட்டி அளிக்கப்படுகிறது.Insurance: இதில் LIC நிறுவனத்தின் முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். ஏனென்றால் மிக நீண்ட கால முதலீடு என்பதால் கொஞ்சம் நம்பகத் தன்மை தேவைப்படுகிறது.5 Year Fixed Depostis: அண்மையில் இது 80Cன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ELSS Mutual Fund: கொஞ்சம் அதிக ரிடர்ன் எதிர் பார்ப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம். இதனுடைய முதலீட்டுக் காலம் 3 ஆண்டுகள்.National Saving Certificate: இது மத்திய அரசின் பத்திரம். 8% வட்டி அளிக்கிறது.
மற்றபடி ULIP Insurance, ICICI Prudential என்று பல திட்டங்கள் உள்ளன. ஆனால் அதனை நாம் பரிந்துரை செய்ய விரும்பவில்லை.

இந்த ஒரு லட்சம் என்ற வரம்பானது தங்கள் சம்பளத்தில் பிடிக்கப்படும் PF தொகையும் சேர்த்து தான். அதனால் அதற்கு தகுந்தவாறு திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

மற்றவை

மருத்துவம்: இது போக 15000 ரூபாய்க்கு வரம்பிற்கு உட்பட்டு மருத்துவ செலவுகளையும் காட்டிக் கொள்ளலாம்.HRA: நீங்கள் வீட்டு வாடகை செலுத்துபவராக இருந்தால் உங்கள் HRA பொறுத்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம். இது அதிக வரியினை சேமிக்க உதவும்.வீட்டுக் கடன்: வீட்டு வங்கிக் கடன் எடுத்து இருந்தால் செலுத்தி இருந்த அசலை 80Cன் கீழ் உள்ள ஒரு லட்ச விலக்கில் சேர்த்துக் கொள்ளலாம். வட்டியை எதிர்மறை வருமானம் என்ற பிரிவின் கீழ் விலக்கு பெறலாம். வரி விலக்கு பெறுவதற்கு வட்டிற்கான உச்ச வரம்பு 150000 ரூபாய் ஆகும். இந்த முறையில் வரி விலக்கு பெற்றால் HRA வரி விலக்கு பெறசில நிபந்தனைகள் உள்ளன.இது போக இன்னும் சில வழிமுறைகள் உள்ளன. அதில் பொதுவானதையும் எளிதானதையும் மட்டும் மேலே எடுத்து உள்ளோம்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.