ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் உற்பத்தித் துறையில் பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன, இதனால் முதலீடுகல் இந்தத் துறையில் தாமதமாகலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தொழிற்துறை உற்பத்தி ஜூலை மாதத்தில் 1.2% வளர்ச்சி மட்டுமே கண்டுள்ளது, ஓராண்டுக்கு முபாக இது 4.5% ஆக இருந்தது என்றும், குறிப்பாக நுகர்வோருக்கு நேரடியாகத் தொடர்பில்லாத மூலதன பொருட்களின் உற்பத்தி படுமோசமாக பாதிப்படைந்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
2017-18 நிதிக்கொள்கை மதிப்பீட்டறிக்கையில், பொருளாதார வளர்ச்சி முன்பு குறிப்பிட்டது போல் 7.3% ஆக இருக்காது என்றும் மாறாக 6.7% ஆக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி விளைவுகள் ஆரம்பக்கட்ட பிரச்சினைகளே என்றும் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட்டு மீண்டும் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதைக்குத் திரும்பும் என்றும் ஆர்பிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
“ஜிஎஸ்டி அமலாக்கம் இதுவரை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் குறுகிய காலத்திற்கு உற்பத்தித் துறை பாதிப்படைந்துள்ளது. இதனால் முதலீட்டு நடவடிக்கை இந்தத் துறையில் தாமதமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கெனவே வங்கிகள் மற்றும் கார்ப்பரேட்களின் சுமை அதிகரிக்கும் இருப்பு நிலைக் குறிப்புகளால் (பேலன்ஸ் ஷீட்) பாதிக்கப்பட்டது” என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
வர்த்தகம் செய்வதற்கு இயைபான சூழலை உருவாக்க ஜிஎஸ்டி கெடுபிடிகளை அரசு எளிமையாக்க வேண்டும் என்று ஆர்பிஐ பரிந்துரை செய்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.