மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில், தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வருவாய்த் துறை அமைச்சகம் நேற்று (அக்டோபர் 6) வெளியிட்ட அறிக்கையில், ‘‘தபால் நிலையம், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா மற்றும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் போன்றவற்றில் சேமிப்புக் கணக்கைத் தொடங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் வேண்டும். புதிதாக இந்தக் கணக்குகளை தொடங்குவோர் ஆதார் எண்ணுடன் கணக்கு தொடங்க வேண்டும். ஏற்கெனவே இவற்றில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பம் செய்ததற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளது.
This comment has been removed by the author.
ReplyDelete