Wednesday, 4 October 2017

வங்கி வட்டி விகிதம் இன்று அறிவிப்பு

வங்கிகளுக்கான, 'ரெப்போ' வட்டியை குறைத்து, நாட்டின் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க, ரிசர்வ் வங்கியின் உதவியை, மத்திய அரசு எதிர்நோக்கி உள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அறிமுகம் காரணமாக, பல்வேறு துறைகளின் வளர்ச்சியில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.இதன் எதிரொலியாக, மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, ஏப்., - ஜூன் வரையிலான காலாண்டில், 5.7 சதவீதமாக குறைந்துள்ளது.
அதே சமயம், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலை உயர்வால், ஆகஸ்டில், நாட்டின் பணவீக்கம், ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு, 3.36 சதவீதமாக அதிகரித்துள்ளது; இது, ஜூலையில், 2.36 சதவீதமாக இருந்தது. இத்தகைய சூழலில், பொருளாதாரம் மேலும் சுணக்கம் அடைவதை தடுத்து நிறுத்திட, ரிசர்வ் வங்கியின் உதவியை, மத்திய அரசு எதிர்நோக்கி உள்ளது.


Vetrikodikattucommerce

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.