அவசர நிதி:
1. 20% நிதியை அவசர நிதியாக வைத்துக்கொள்ளுங்கள். இதில் ஒரு பகுதி 65% நீண்ட கால வாய்ப்பிலும் (FD), மீதியை சாதாரண கணக்கிலும் வைத்து கொள்ளுங்கள். தற்போது FDயை 1 நாளில் திரும்ப பெற அளவுக்கு வசதியாக உள்ளது . சராசரியாக FD 8%ம் , சாதாரண கணக்கு 3%ம் வட்டி தருவார்கள். இந்த முதலீட்டில் எப்ப எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது முன் கூட்டியே நன்றாக தெரியும்.
80% இதர முதலீடுகள்:
இதனை HIGH RISK, RISK, NO RISK என்று பிரித்து கொள்ளுங்கள்.
2. NO RISK என்ற பிரிவில் அரசு பத்திரங்கள், NSC, PPF, VPF, KVB, 5 வருட FD, என்றவற்றை சேர்த்து கொள்ளலாம். இந்த முதலீட்டில் எப்ப எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது முன் கூட்டியே நன்றாக தெரியும். சராசரியாக 8~9% வட்டி கிடைக்கும். ஆனால் குறைந்தது 5 வருடமாது காத்திருக்க வேண்டி இருக்கும். இந்த மாதிரி முதலீடுகளில் 20% (6 லட்சம்) பண்ணுங்கள். 1 லட்சம் வரை வருமான வரி சலுகையை பெற்று கொள்ளலாம்.
3. RISK என்ற பிரிவில் தங்கத்தை சேர்த்து கொள்ளலாம். நம்பிக்கை படி பார்த்தால் இதனை RISK ஆக சேர்க்க முடியாது. ஆனால் 2 வருடங்களுக்கு குறைந்த கால முதலீடு என்று பார்த்தால் ஏற்ற, இறக்கங்கள் அதிகமாக இருக்கும். அதனால் நீண்ட கால முதலீடாக செய்வது பலன் அதிகமாக இருக்கும். செய்கூலி, சேதாரம் தவிர்க்க GOLD ETF பத்திரங்களை வாங்கினால் 10~15% பலன் அதிகமாக இருக்கும். இதில் 15% முதலீடு செய்யவும். (5 லட்சம்). இப்போதிலிருந்து 5 வருடத்திற்கு முன்னாள் முதலீடு செய்திருந்தால் 201% திரும்ப பெற்றிருப்பீர்கள்.
4. HIGH RISK பிரிவில் பங்கு சந்தை சார்ந்த முதலீடுகள் வருகின்றன. இதில் மீதி 45% முதலீடு செய்யுங்கள். இதனை மூன்று வரியில் விளக்குவது கடினம். அடுத்து வரும் பதிவுகளில் விவரங்களுடன் விளக்குகிறேன்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.