பெண் தொழில்முனைவோரை ஊக்குவித்தால், அடுத்த, 30 ஆண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 9 - 10 சதவீதமாக உயரும்,'' என, 'நிடி ஆயோக்' தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெண்களின் பங்கு, 22 சதவீத அளவிற்கே உள்ளது. இது, சர்வதேச அளவில், சராசரியாக, 44 - 45 சதவீதமாக உள்ளது. அதனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெண்கள் பங்கை அதிகரிக்க வேண்டும்.
இதன் மூலம், அடுத்த, 30 ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 9 - 10 சதவீதமாக உயரும். அத்துடன், மக்கள் தொகையில், அதிக அளவில் பணித்திறன் உள்ளோர் நாடாகவும் இந்தியா பரிமளிக்கும். வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம், ஆண்களை விட சிறந்தவர்கள் என்பதை பெண்கள் நிரூபித்து வருகின்றனர்.
அதனால், இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்ற விரும்பினால், பெண் தொழில்முனைவோருக்கு அதிக ஊக்கமும், ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும். பெண்கள் முன்னேறவில்லையென்றால், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தலைமுறைகளின் சுழற்சி தொடரும். இதனால், சிசு இறப்புகள் தொடர வழி வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.