YOUTUBE (யூடியூப்) செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி?
இணையத்தில் வீடியோக்களை பார்க்க அதிகம் பயன்படுத்தப்படும் தளமாக யூடியூப் இருக்கிறது. பயனரில் சர்ச் ஹிஸ்ட்ரி (முன்னதாக அவர்கள் பார்த்து ரசித்த வீடியோ) சார்ந்து வீடியோக்களை பரிந்துரை செய்யும்.
How to use incognito mode in YouTube
எனினும், சில சமயங்களில் வீடியோக்கள் சர்ச் ஹிஸ்ட்ரியில் காண்பிக்க வேண்டாம் என நினைப்போம். இந்த பிரச்சனையை ஆன்ட்ராய்டு செயலியின் புதிய இன்காக்னிட்டோ மோட் மூலம் எதிர்கொண்டுள்ளது.
யூடியூப் இன்காக்னிட்டோ அம்சம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கு வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. சமீபத்தி்ல் பயனர் சர்ச் ஹிஸ்ட்ரியை மறைக்க செய்யும் அம்சத்தை ஐ.ஓ.எஸ். தளத்தின் ஜிபோர்டு மற்றும் கூகுள் ஆப்ஸ் செயலிகளில் வழங்கியது.
How to use incognito mode in YouTube
யூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.-
அப்டேட் செய்யப்பட்ட யூடியூப் ஆப் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்
- இன்டர்நெட் இணைப்பு
யூடியூப் செயலியை அப்டேட் செய்வது:
பழைய வெர்ஷன் கொண்ட யூடியூப் செயலியை பயன்படுத்துவோர், முதலில் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
How to use incognito mode in YouTube
1 - கூகுள் பிளே ஸ்டோர் சென்று யூடியூப் ஆப் சர்ச் செய்ய வேண்டும்.
2 - செயலியில் 'Install’ ஆப்ஷனுக்கு பதில் 'Update’ என்ற பட்டன் காணப்படும்.
3 - இனி 'Update’ பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் செயலி அப்டேட் ஆகும்.
இன்காக்னிட்டோ ஆப்ஷனை பயன்படுத்த:
1 - யூடியூப் செயலியை க்ளிக் செய்ய வேண்டும்.
2 - செயலியின் மேல்பக்கம் காணப்படும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
3 - இனி அக்கவுன்ட் (Account) ஆப்ஷனை க்ளிக் செய்து இன்காக்னிட்டோ (Turn on Incognito) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
How to use incognito mode in YouTube
இன்காக்கனிட்டோ மோட் ஆக்டிவேட் ஆனதும், அவதார் ஐகான் கருப்பு நிற இன்காக்னிட்டோ சின்னம் கொண்டிருக்கும். இதைத் தொடர்ந்து நீங்கள் இன்காக்னிட்டோ மோடில் இருப்பதை தெரிவிக்கும்
(You’re incognito) என்ற வாசகம் காணப்படும்.
இன்காக்னிட்டோ ஆப்ஷனில் இருக்கும் போது, பிரவுசிங் மற்றும் அனைத்து வீடியோக்களையும் பார்க்க முடியும். இவை எதுவும் சர்ச் ஹிஸ்ட்ரியில் இடம்பெறாது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.