ஜான்சன்ஸ் பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் வந்ததாக 22 பெண்கள் அமெரிக்கப் பார்மா நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மீது தொடர்ந்து இருந்த வழக்கிற்கு வியாழக்கிழமை தீர்ப்பு அளித்த நீதிமன்றம் 4.69 பில்லியன் டாலரினை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது. உலகம் ஜான்சன் & ஜான்சன் நிறுவத்தின் மீது இது போன்று ஆயிரக்கணக்கான வழக்குகள் உலகம் முழுவதிலும் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்பெஸ்டாஸ் கடந்த 40 ஆண்டுகளாக ஜான்சன் & ஜான்சன் தனது தயாரிப்புகளில் புற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் இரசாயனத்தினைப் பயன்படுத்தியது உறுதியானதன் பேரில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜான்சன் & ஜான்சன் இந்த வழக்கின் தீர்ப்பிற்குப் பிறகாவது ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தங்களது தயாரிப்புகளில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ், பவுடர் மற்றும் புற்றுநோய் இடையில் உள்ள தொடர்பை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று வழக்கில் வெற்றி பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர். மறுப்பு ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த பிறகு தங்களது தயாரிப்புகளில் புற்று நோய் ஏற்படுத்த கூடிய ஆஸ்பெஸ்டாஸ் இருப்பதை மறுத்தே வருகிறது. வழக்குகள் இதே போன்ற ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மீதான பல வழக்குகளைச் சென்ற அக்டோபர் மாதம் வரை லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து வந்துள்ள நிலையில் இந்தத் தீர்ப்பினால் மேலும் பல வழக்குகள் நிறுவனத்தின் எதிராகத் தொடர வாய்ப்புகளும் உள்ளது
very shock news..thank u for sharing this news
ReplyDelete