மும்பை: . கருப்பு பணத்தை ஒழிக்கும் விதத்தில் எந்த வித வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான போலி நிறுவனங்களின் பதிவை மத்திய அரசு ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து 333 போலி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பங்குசந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி அறிவுறுத்தி இருந்தது.அதன்படி வர்த்தகம் நடைபெறாத, சந்தேகத்திற்குரிய விதத்தில் செயல்பட்ட 200 நிறுவனங்கள் கடந்த மே மாதம் மும்பை பங்குசந்தையில் இருந்து நீக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மேலும் 222 நிறுவனங்கள் இன்று முதல் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு ஆண்டுகளாக செயல்படாது, பெயரளவில் உள்ள, 3-4 லட்சம் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்வது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. பலர், பெயரளவில் நிறுவனங்களை பதிவு செய்து, அவற்றின் மூலம், சட்ட விரோத பணப் பரிமாற்றம், வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய போலி நிறுவனங்களை களையெடுக்க, மத்திய அரசு, சிறப்பு குழுவை அமைத்து உள்ளது.இக்குழு, 16 ஆயிரம் நிறுவனங்கள் போலியானவை என, அடையாளம் கண்டுள்ளது. 80 ஆயிரம் நிறுவனங்களை, சந்தேக பட்டியலில் சேர்த்துள்ளது. இத்துடன், பொது இயக்குனர்களைக் கொண்ட, 17 ஆயிரம் போலி நிறுவனங்களை கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில், நிறுவனச்சட்டப்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாமலும், எவ்விதமான வர்த்தகம் புரியாமலும் உள்ள நிறுவனங்களின் பதிவை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கடந்த, 2017 டிசம்பர் நிலவரப்படி, 17 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள், மத்திய நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 11.40 லட்சம் நிறுவனங்கள், செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் செயல்படாத நிறுவனங்களும் அடங்கி உள்ளன.இந்நிலையில், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக வர்த்தகம் புரியாமல், நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யாமல் உள்ள, 25-30 சதவீத நிறுவனங்கள் களையெடுக்கப்படும் என, தெரிகிறது. அவை, மத்திய நிறுவனங்கள் பதிவாளர் அலுவலக பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்படலாம். இந்த வகையில், 3 -4 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இதுபோன்ற காரணங்களுக்காக, 2.25 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவு நீக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.