Sunday, 1 July 2018

சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது - பிரதமர் மோடி

சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு மாற்றாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி) முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான, சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில் ஜி.எஸ்டி. வரிவிதிப்பு முறை கொண்டு வரப்பட்டது. இது இந்திய வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது. இது தொடர்பான மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நள்ளிரவில் கூட்டம் நடத்தப்பட்டு, அதைத்தொடர்ந்து மறுநாள் ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

2-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், வெளிப்படைத் தன்மை உருவாகி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.