புதுடெல்லி: கம்பெனி சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை பிரிவுகளை ஆய்வு செய்து, சில குற்றங்களை குற்றமற்றதாக மாற்ற 10 பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழு தனது அறிக்கையை 30 நாளில் தாக்கல் செய்யும். கம்பெனிகள் சட்டம் கடந்த 2013ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் உள்ள சில குற்றங்களை குற்றமற்றதாக்கி, ஒரு நிறுவனத்துக்குள்ளே விசாரித்து அபராதம் விதிக்கும் வகையில் மாற்ற வேண்டும் என கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகம் விரும்புகிறது. இதற்காக கம்பெனி சட்டங்களின் கீழ் உள்ள குற்றங்களை மறு ஆய்வு செய்ய 10 பேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவுக்கு கம்பெனிகள் விவகாரத்துறை செயலாளர் இன்ஜேடி சீனிவாஸ் தலைமை வகிக்கிறார். இதில் கோடாக் மகேந்திரா வங்கியின் துணைத் தலைவர் உதய் கோடாக், முன்னாள் மக்களவை செயலாளர் ஜெனரல் டி.கே.விஸ்வநாதன் உட்பட 10 பர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு கம்பெனி சட்டங்களை ஆய்வு செய்து, மத்திய அரசிடம் 30 நாளில் அறிக்கை தாக்கல் செய்யும். இதன் மூலம் நீதிமன்றங்கள் முக்கிய வழக்குகளில் கவனம் செலுத்த முடியும். பேசித் தீர்க்கக்கூடிய குற்றங்கள், அபராதம் விதிக்கக்கூடிய குற்றங்கள், அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்கள் எவை என ஆலோசிக்கப்படும். விசாரணை அதிகாரியே அபராதம் விதிக்கும் சாதாரண குற்றங்கள் மற்றும் தவறுகள் எவை, நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டிய குற்றங்கள் எவை என இந்த குழு முடிவு செய்யும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.