சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைந்த பட்சம் 25 சதவீதம் உள்ள 121 மாவட்டங்கள் பட்டியலை மத்திய அரசு அனுப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, லட்சத்தீவுகள் போன்ற சிறுபான்மையினர் அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. மேற்கண்ட 121 மாவட்டங்களில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு, முன்னுரிமை கடன் துறைகளில் நியாயமான சமமான அளவுக்கு கடன்களை வங்கிகள் வழங்க வேண்டும். சீக்கியர், முஸ்லிம், கிறிஸ்தவர், பவுத்த மதத்தினர், ஜைனர்கள் போன்றோர் சிறுபான்மையினராக மத்திய அரசு வகைப்படுள்ளது. எனவே, முன்னுரிமை துறைகளுக்கு கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், இந்த நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதத்தை வழங்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு நியாயமான, சமமான அளவில் கடன் வழங்குவதை வங்கிகள் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக, வங்கிகள் மேற்கண்ட 121 மாவட்டங்களில், முன்னுரிமை துறைக்கான கடன்கள் வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதற்காக வங்கிகள் மேற்கண்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரியை நியமித்து, கடன்பெறுவதில் சிறுபான்மையினருக்கு உள்ள பிரச்னைகளை கண்டறிய வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பிரதமரின் 15 அம்ச திட்டத்தில், சிறுபான்மையினருக்கு முன்னுரிமை துறைகளில் கணிசமான அளவு கடன் வழங்குவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.சீன வங்கிக்கு அனுமதி கடந்த மாதம் சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, பாங்க் ஆப் சீனா இந்தியாவில் கிளை நிறுவ உரிமம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக சீன அதிபர் ஜின்பிங்கிடம் உறுதி அளித்திருந்தார். இதை தொடர்ந்து, பாங்க் ஆப் சீனா தனது முதல் கிளையை இந்தியாவில் அமைப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.