Wednesday, 25 July 2018

கடந்த ஆண்டு டிசம்பர் புள்ளி விவரப்படி, வங்ககிகளின் வராக்கடன் 9 லட்சம் கோடியை தாண்டிவிட்டது.

50 கோடி மற்றும் அதற்கு மேல் உள்ள வராக்கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. வராக்கடன் பிரச்னையால் வங்கிகளின் நிதிநிலை மோசமாகி வருகிறது. இதற்கு தீர்வு காண அரசு நியமித்த சுனில் மேத்தா குழு, சொத்து நிர்வாக நிறுவனங்கள் மூலம் தீர்வு காணுதல். இதில் பலன் இல்லையென்றால் தீர்ப்பாயங்கள் மூலம் நடவடிக்கை மற்றும் திவால் சட்ட நடவடிக்கைகள், இன்டர் கிரெடிட் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட 22 பொதுத்துறை வங்கிகள், இந்தியா போஸ்ட்பேமன்ட் வங்கி, 19 தனியார் வங்ககிகள், 32 வெளிநாட்டு வங்கிகள் மற்றும் எல்ஐசி உள்ளிட்ட வீட்டு வசதி கடன் நிறுவனங்கள் இன்டர்கிரெடிட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.இதன்படி, வராக்கடனுக்கு தீர்வு காண கடன் அளித்த வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் பரிந்துரைப்படி தீர்வு வழிமுறைகள் மேற்பார்வை குழுவால் ஆராயப்படும். பெரும்பான்மை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் ஒப்புதல் பெற்ற பிறகு, சம்பந்தப்பட்ட திட்டத்தை இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ள அனைவரும் செயல்படுத்துவார்கள். ரிசர்வ் வங்கி விதிமுறைகள் மற்றும் சட்ட விதி, வழிகாட்டுதலுக்கு ஏற்ப அமல்படுத்தப்படும். ரிசர்வ் வங்கி விதித்த கெடுவான 180 நாட்களுக்குள் கடன் பிரச்னைக்கு நிபுணர்களின் கருத்துப்படி தீர்வு காணப்படும் என ஒப்பந்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அந்தந்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் நிர்வாக குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் புள்ளி விவரப்படி, வங்ககிகளின் வராக்கடன் 9 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. இது குறித்து ரிசர்வ் வங்கியும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.