கோவை : ஜிஎஸ்டி அமலுக்கு வந்த ஒரு ஆண்டில் 400க்கு மேற்பட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தொழில் துறையினர் தவித்து வருகின்றனர். கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (கொசிமா) சார்பில் ஜிஎஸ்டி விளக்க கூட்டம் சிட்கோ தொழிற்பேட்டையிலுள்ள கொசிமா அலுவலகத்தில் நடந்தது. இதில் கொசிமா தலைவர் சுருளிவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் ஜிஎஸ்டி ஆலோசகர் சுவாமி அசோசியேட்ஸ் ஜெய்குமார் பேசியதாவது: ஜிஎஸ்டி அமலுக்கு வந்து ஒரு ஆண்டாகிறது. 365 நாளில் ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் 400க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய, புதிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. ஏற்கெனவே வெளியான அறிவிப்புகளை தொழில்துறையினரிடம் அதிகாரிகள் கொண்டு சேர்ப்பதற்குள், அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருவதால், அதிகாரிகளுக்கும், தொழில்துறையினருக்கும் இடையே ஜிஎஸ்டி புதிய தகவல் பரிவர்த்தனை ஆவதில்லை.இதனால் ெதாழில்துறையினர் ஜிஎஸ்டி குறித்த சமீபத்திய விபரங்கள் தெரியாமலும், அதற்குரிய விளக்கம் பெற முடியாமலும், சந்தேகங்களை போக்கி தெளிவு பெற முடியாமல் காலம் கடந்து வருகிறது. இதனால் தொழில்துறையினர் உரிய நடைமுறைகளை கடைப்பிடிக்க முடிவதில்லை. பலன்களையும் பெற முடிவதில்லை. நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஜிஎஸ்டி கொள்கை முடிவுகள் நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதை மத்திய, மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி, ஜிஎஸ்டி குறித்த நுட்பமான மாற்றங்களை, விபரங்களை அவ்வப்போது தொடர்ந்து அறிவிப்பு செய்து வர வேண்டும். விளக்க கூட்டம் நடத்தி தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு தெளிவுபடுத்தாததால் ஜிஎஸ்டியில் உள்ள குறைபாடுகளும் தெரிவதில்லை. நிறைவான விசயங்களும் தெரிவதில்லை. குறைகளை போக்கவும், நிறைகளை மேற்கொள்ளவும் முடிவதில்லை. மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tuesday, 10 July 2018
365 நாளில் ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் 400க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
Labels:
guna
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.