Saturday, 21 July 2018
ரப்பர் கழகத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு ரப்பர் கழகத்தின் கீழ், 4,430 ஹெக்டேர் பரப்பில் ரப்பர் தோட்டம் உள்ளது.* பால் வடிக்கும் தொழிலில் 2,000 பேர் பணியாற்றுகின்றனர்.* ஒரு தொழிலாளிக்கு பால் வடிக்க 300 மரங்கள் வழங்கப்படுகின்றன.* தொழிலாளர் போராட்டத்தால் தினமும் 6 டன் ரப்பர் பால் மட்டுமே கிடைக்கிறது.நாகர்கோவில்: தொழிலாளர்களின் 14 நாள் போராட்டத்தால் ரப்பர் கழகத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தின் கீழ் கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை, மயிலார், சிற்றார், குற்றியாறு, மறுதம்பாறை, கல்லாறு ஆகிய இடங்களில் மொத்தம் 4,430 ஹெக்டர் பரப்பளவில் அரசு ரப்பர் தோட்டம் உள்ளது. ரப்பர் மரத்தில் பால் வடிக்கும் தொழிலில் ஒரு தொழிலாளிக்கு 300 மரங்கள் வழங்கப்படுகிறது. அவர்கள் தினமும் 16 கிலோ பால் நிர்வாகத்திற்கு வழங்கவேண்டும். அதன் அடிப்படையில் அகவிலைப்படியோடு சம்பளம் வழங்கப்படுகிறது. மொத்தம் 2 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் பால்வடிக்கும் பணியில் நிரந்தர பணியாளர்கள் 800 பேரும், 400 ஒப்பந்த ஊழியர்களும் உள்ளனர். அவர்கள் தினமும் சராசரியாக 18 ஆயிரம் டன் முதல் 19 ஆயிரம் டன்வரை பால்வடித்து கொடுக்கின்றனர். அவர்களுக்கு 1.12.2016 முதல் சம்பள உயர்வு வழங்க வேண்டும். இதற்காக நடந்த பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையொட்டி கடந்த 4ம் தேதி முதல் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் நேற்றுடன் அவர்கள் 14 நாட்களாக ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் தொழிலாளர்கள் தினமும் தலா 5 கிலோ பால் மட்டுமே வடித்துக்கொடுக்கின்றனர். இதனால் தினமும் சுமார் 6 டன் வரை மட்டுமே பால் கிடைக்கிறது. இதன் காரணமாக தினமும் ரப்பர் கழகத்திற்கு 7 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது. 14 நாட்களும் சேர்த்து மொத்தம் சுமார் 1 கோடி வரை ரப்பர் கழகத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
Labels:
guna
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.