Friday, 13 July 2018

ஆசிரியர் கனவு To கனவு ஆசிரியர் விருது...!


நண்பர்களுக்கு வணக்கம்.
வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடங்களை கிராமப்புற மாணவர்களும், குறிப்பாக பார்வைத்திறனற்ற தம்பி,தங்கைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணமாக நான் செய்துவரும் வீடியோ மெட்டிரியல் புத்தாக்க முயற்சிகளை பாராட்டி தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளமைக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தமைக்கு மிக்க நன்றிகள்..!

வணிகவியல் பாடத்திற்க்காக வழங்கப்பட்ட மிகப்பெரிய அங்கீகாரமாக இதை கருதுகிறேன். இனி வரும் காலங்களிலும் எனது புத்தாக்க முயற்சிகள் தொடரும்.



இந்த வெற்றிக்கு நான் மட்டுமே காரணமல்ல...

- பல இரவுகளின் தூக்கங்களுக்கு விடை கொடுத்துவிட்டு, முதுகு வலியுடன் நான் தயார் செய்து வந்தாலும் இந்த வீடியோ மெட்டிரியலை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் அனைத்து மாவட்ட வணிகவியல் ஆசிரியர் பெருமக்களாகிய நீங்களே முதல் காரணம்..!

- எனது வீடியோவை பார்த்து, கருத்துகளை கூறும் முதல் பார்வையாளர்களான என் வகுப்பு தம்பி,தங்கைகள், என் மனைவி,

- எமது கரூர் மாவட்டத்தின்  வணிகவியல் ஆசிரியர்கள்,

- என் உடன் பிறவாத சகோதரர்கள் மகேந்திரன்,லோகநாதன், குணசேகரன்

- பேராசிரியர் மனோகரன்,

- என் பள்ளி தலைமை ஆசிரியர்,

- என்னை ஊக்குவித்துவரும் சக ஆசிரிய நண்பர்கள்,

- ஆலோசனைகளை வழங்கி வரும் நண்பர்கள்,

 - எனது Youtube சேனலின் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள்

- எமது TNPGTA அமைப்பின் நண்பர்கள்

    அனைவருக்கும் நன்றிகள். 
உங்களாலேயே இது சாத்தியமாயிற்று..!!!

ஆசிரியர் பணியில் கனவுகளோடு சேர்ந்த எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த கனவு ஆசிரியர் விருதினை ஒதுக்கப்பட்ட கல்லாக கலைப்பிரிவில் காலடி வைத்து கோபுர கலசங்களாக உயரப்போகும் தம்பி,தங்கைகளுக்கு சமர்ப்பிக்கிறேன்...!!!

எனது Youtube channel,Facebook page :  karthikeyan commerce
நட்புடன்,
ப.கார்த்திகேயன்,
வணிகவியல் ஆசிரியர்,
அரசுமேல்நிலைப்பள்ளி,
ஈசநத்தம்,
கரூர் மாவட்டம்.
Cell: 9943149788

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.