தமிழகத்தில் சென்னை புழல், மதுரை, கோவை உட்பட 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 கிளைச்சிறைகள், 5 சிறப்பு கிளைச்சிறைகள், 11 சிறுவர் சீர்திருத்த பள்ளிகள், 2 வெளி சிறைகள் உள்ளன. இவற்றில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் கைதிகள் உள்ளனர். கைதிகள் சிறையில் இருக்கும்போது உடல்நல பாதிப்பு, திடீர் காயங்கள், உயிரிழப்பு போன்றவைகளுக்கு அரசு உதவித்தொகை, இன்சூரன்ஸ் போன்ற எந்த பலனும் கிடைப்பது இல்லை. சிறைகளில் கைதிகள் பேவர் பிளாக், மர வேலைகள், நர்சரி, பேக்கரி, பெட்ரோல் பங்க் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏற்படும் விபத்துகளை ஈடுகட்ட பிரதமர் இன்சூரன்ஸ் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பிரதமர் திட்ட பாலிசியில் மாதம் ரூ.112 கட்டினால் முடிவில் ரூ.24 லட்சம் வரை கிடைக்கும். கைதிகளால் மாதந்தோறும் இவ்வளவு தொகையை செலுத்த முடியாது. இதனால் பிரதமர் விபத்து பாலிசி திட்டத்தில் வருடத்தில் ஒரு முறை ரூ.12 கட்டினால் போதும். ரூ.2 லட்சம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தில் கைதிகளை கணக்கில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக வரும் கைதிகளிடம் ரூ.12 வசூல் செய்து தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கி இன்சூரன்ஸ் பாலிசி செலுத்தப்படும். இதேபோல் பழைய கைதிகளுக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கைதிகளுக்கு விபத்து ஏற்பட்டால் சிகிச்சை மற்றும் உயிரிழப்புக்கு இந்த தொகை பயனுள்ளதாக அமையும்’’ என்றனர்.
Sunday, 15 July 2018
பிரதமர் பாலிசி திட்டத்தின்கீழ் தமிழக சிறையில் உள்ள கைதிகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
Labels:
guna
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.