Wednesday, 18 July 2018

வரும் 21ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

புதுடெல்லி : நாப்கின், கைவினை பொருட்கள் உட்பட மேலும் சில பொருட்களின் மீதான வரியை குறைப்பது தொடர்பாக, வரும் 21ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. ஜிஎஸ்டி அறிமுகமாக ஓராண்டில், மாநில அரசுகள் மற்றும் தொழில் துறையினர் கோரிக்கைக்கு ஏற்ப ஏராளமான பொருட்களின் வரி மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் அதிரடியாக 200க்கும் மேற்பட்ட பொருட்களின் வரி குறைக்கப்பட்டது. கடந்த ஜனவரியில் சில பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 21ம் தேதி கூடுகிறது. இதில், மேலும் சில பொருட்களின் மீதான வரி விதிப்பு குறைக்கப்படலாம் என்று தெரிகிறது. குறிப்பாக, சானிடரி நாப்கின், கைவினை பொருட்கள் மீதான வரி குறையும் என்று ஜிஎஸ்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சானிடரி நாப்கினுக்கு 12 சதவீத வரி உள்ளது. இதுமட்டுமின்றி, ஆடம்பர பொருட்கள் மீது கூடுதலாக விவசாய செஸ் வரி விதிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படும் என்று ஜிஎஸ்டி வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.