Wednesday, 18 July 2018

இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு

இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு:
கச்சா எண்ணெய் விலை சரிவு எதிராலி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் உயர்ந்து 68.36 ரூபாயாக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை அண்மையில் உயர்ந்து வந்தநிலையில் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்களும், வங்கிகளும், அமெரிக்க டாலர்களை இன்று அதிகஅளவில் விற்பனை செய்தன.

இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 21 காசுகள் உயர்ந்தது. இன்றைய காலை நேர வர்த்தகத்தின்படி, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.36 ரூபாயாக இருந்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவதாலும் டாலர்கள் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இந்திய பங்குச்சந்தைகளில் முற்பகல் வர்த்தகம் .உயர்ந்து காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று காலை சரிவுடன் தொடங்கியது. எனினும் பின்னர் நிலைமை சீரடைந்து 107 புள்ளிகள் உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 36,431 புள்ளிகளாக வர்த்தகமானது. அதுபோலவே தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டு எண்ணான நிப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 10,977 புள்ளிகளாக இருந்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.