கோவையில் 3,800 கிரில் உற்பத்தியாளர்கள் உட்பட மாவட்டத்தில் 8,100 உற்பத்தியாளர்கள் தொழிற்கூடம் அமைத்திருந்தனர். இதில் இரும்பு மூலம் கட்டுமான தொழிலுக்கு தேவையான கதவு, ஜன்னல், மாடிப்படி பாதுகாப்பு தடுப்பு உள்பட பல்வேறு கிரில்கள் இரும்பு மூலம் உற்பத்தியாகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு துவக்கம் முதல் மணல் பற்றாக்குறை, மணல் விலை உயர்வு காரணமாக கட்டுமான தொழில் முடங்கியது. இதனால் கிரில் உற்பத்தி கூடங்களில் ஜாப் ஒர்க் 50 சதவீதத்திற்கு மேல் குறைந்தது. இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜூலையில் அமலான ஜிஎஸ்டியில் 18 சதவீதம் விதிக்கப்பட்டது. ஏற்கனவே கலால் வரி 12.5 சதவீதம் மற்றும் வாட் 5 சதவீதம் என மொத்தம் 17.5 சதவீதம் இருந்தது. ஜிஎஸ்டியில் அரை சதவீதம் உயர்ந்ததாக கருதினாலும், ஜிஎஸ்டிக்கு பிறகு கடந்த ஒரு ஆண்டில் கிரில் தொழில்களுக்கான மூலப்பொருள்கள் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் கிரில் தொழில் நஷ்டமடைந்து தடுமாறி வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் கோவை மாவட்டத்தில் 2 ஆயிரம் கிரில் உற்பத்தி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மாநில பொருளாளருமான கிரில் உற்பத்தி தொழில்களில் ஈடுபட்டுள்ள குறுந்தொழில் கூடங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் கிரில்களுக்கு கிலோ வீதம் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கின்றனர். அதில் கிடைக்கும் தொகையில் மூலப்பொருள், தொழிலாளி கூலி, மின் கட்டண செலவு, நிர்வாக செலவு ஆகியவை போக ஜிஎஸ்டிக்கு முன்பு 5 சதவீதம் லாபம் கிடைத்து வந்தது. ஜிஎஸ்டிக்கு பின்னர் மூலப்பொருட்களான இரும்பு ஆங்கிள், பட்டா, பைப், ஷீட், உருட்டு கம்பிகள் ஆகியவற்றின் விலை கடந்த ஒரு ஆண்டில் டன்னுக்கு ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்தி செலவு அதிகரித்தது. அதற்கேற்ப ஜாப் ஒர்க்கிற்கு உரிய விலை கிடைக்காமலும், ஜாப் ஒர்க் இல்லாததாலும், நஷ்டமடைந்து 2 ஆயிரம் கிரில் தொழிற்கூடங்கள் கடந்த ஒரு ஆண்டில் படிப்படியாக மூடப்பட்டுள்ளன. மூலப்பொருள்கள் விலை உயர்விற்கு ஜிஎஸ்டி நடைமுறை, விற்பனையாளர்களின் செயற்கை விலையேற்றம், பதுக்கல் ஆகியவை காரணமாகியுள்ளது. ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும், மூலப்பொருட்கள் தடையின்றி கிடைக்கவும், விலை உயர்வை குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.