Sunday, 1 July 2018

ஏர்பஸ் ஏ319-133சி வகையை சேர்ந்த மல்லையாவின் ✈️ விமானம் விற்பனை


தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொகுசு விமானம் 4வது முறையாக விடப்பட்ட ஏலத்தில் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டது. ரூ80 கோடி மதிப்பிலான இந்த விமானத்தை அமெரிக்க நிறுவனம் ரூ35 கோடிக்கு தட்டிச் சென்றது. கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா, வங்கிகளில் ரூ9000 கோடி வங்கி கடன் மோசடி செய்து விட்டு இங்கிலாந்து தப்பி விட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, மல்லையாவின் சொத்துக்களை முடக்கியுள்ளது. மேலும், கிங்பிஷர் விமான நிறுவனம் பயணிகளிடம் இருந்து வசூலித்த டிக்கெட் கட்டணத்திற்கு சேவை வரி செலுத்தாமல் பல கோடிக்கு வரி பாக்கி வைத்துள்ளது.இதற்காக சேவை வரித்துறை, மல்லையாவின் சொகுசு விமானத்தை கடந்த 2013ல் பறிமுதல் செய்து, நீதிமன்ற உத்தரவின்படி ஏலத்தில் விற்க முடிவு செய்தது. முதல் 3 முறை நடத்தப்பட்ட ஏலத்தில் விமானம் விலை போகவில்லை. இந்நிலையில், 4வது முறையாக தற்போது ஏலம் நடத்தப்பட்டது. குறைந்தபட்ச விலையாக ரூ12 கோடி நிர்ணயிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த விமான போக்குவரத்து மேலாண்மை நிறுவனம் அதிகபட்சமாக ரூ34.8 கோடிக்கு ஏலம் கேட்டது. எனவே, அந்நிறுவனத்திற்கே விமானம் விற்கப்பட்டது.இது குறித்து நிபுணர் ஒருவர் கூறுகையில், ‘‘ஏர்பஸ் ஏ319-133சி வகையை சேர்ந்தது மல்லையாவின் விமானம். இதில் பல்வேறு சொகுசு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த தரத்தில் உள்ள விமானம் தற்போது ரூ,680 கோடிக்கு விலை போகும். ஆனால், மல்லையா விமானம் அடிமாட்டு விலைக்கு விலை போக காரணம், அது பறக்கும் நிலையில் இல்லை. 5 ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க நிறுவனம் குறைந்த விலைக்கு வாங்கியுள்ளது என்றார்.பறக்கும் சொகுசு பங்களாமல்லையாவின் சொகுசு விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் 5 ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த விமானத்தில் 25 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பயணிக்க முடியும். இதை வீடு மற்றும் அலுவலகமாக மல்லையா பயன்படுத்தி உள்ளார். மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர ஜெட் விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் கருத்தரங்க அறை, படுக்கை அறை, குளியல் அறை, மது பார் என பல அம்சங்களும் உள்ளன. வானில் பறக்கும் சொகுசு பங்களா என இந்த விமானத்தை வர்ணித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.