Wednesday, 11 July 2018

கோவைக்கு வந்த வெளிநாட்டு வேலை


தாய்லாந்தில் தொழில் துவங்க கோவை தொழில் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தொழில் வர்த்தகசபை கோவை கிளை (சேம்பர்), கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) ஆகிய அமைப்புகள், இந்தோ-தாய்லாந்து தொழில் வர்த்தக சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நேற்று கோவையில் நடந்தது. சேம்பர் தலைவர் வனிதா மோகன் வரவேற்றார். இதில் கோவை தொழிற்துறையினர், தாய்லாந்திலுள்ள இந்திய தொழில்துறையினருடன் பரஸ்பரம் மேற்கொள்ள வேண்டிய ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் குறித்து ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டனர். இது குறித்து இந்தோ - தாய்லாந்து தொழில் வர்த்தக சபையின் தலைவர் புல் கூறியதாவது: தாய்லாந்தில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்தி பொருள்களுக்கு வரி விலக்கு உள்ளது. இந்தியா தாய்லாந்து இடையே கடந்த ஆண்டு 820 கோடி டாலருக்கு வர்த்தகம் நடந்துள்ளது. தாய்லாந்தில் கோவை தொழிற்துறையினர் உற்பத்தி செய்து, அங்கிருந்து உலகின் பெரும்பகுதி நாடுகளுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்து லாபம் பெறலாம். கோவை தொழில்துறையினர் தாய்லாந்தில் தொழில் துவங்க முன் வர வேண்டும். தொழில் துவங்க ஒரே நாளில் அனைத்து அனுமதிகளும் அரசால் வழங்கப்படுகிறது. இதை கோவை தொழில்துறையினர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.