Saturday, 21 July 2018

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது.

மும்பை:  நாடாளுமன்றத்தில் மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தைச் சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளதால், தற்போது அரசியலில் நிலையற்ற தன்மை உருவாகியுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள், தனது முதலீட்டைக் குறைத்து வருவதால் ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து வருவதன் எதிரொலியாகவும் இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.69.12 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை உயர்ந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களாலும் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த ஜீன் மாதம் 28ம் தேதி இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.69.10 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 43 காசுகள் குறைந்து ரூ.69.05 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.