இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ விவசாயிகளின் நிதி அறிவை வளர்க்க கிசான் மேளா என்ற நிகழ்வை நாடு முழுவதும் புதன் கிழமை நடத்த முடிவு செய்துள்ளது. இந்தக் கிசான் மேளா நிகழ்வின் கீழ் நாடு முழுவதிலும் இருந்து 14,000 விவசாயிகள் பங்கு பெற்றுப் பயனடைவார்கள் என்றும் எஸ்பிஐ வங்கி எதிர்பார்க்கிறது. எதற்காகக் கிசான் மேளா? கிசான் மேளா நிகழ்வின் கீழ் எஸ்பிஐ வங்கி விவசாயிகளை நேரடியாகச் சந்தித்து அவர்களது துயரங்களைப் போக்கி நிதி அறிவைப் புகுத்த இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். powered by Rubicon Project விவசாய வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கிகளில் 1.50 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்களுக்காக அன்மையில் நடைபெற்ற கிசான் மேளாவில் 6 லட்சம் விவசாயிகள் பங்குபெற்று பயன் அடைந்துள்ளனர். கிசான் கிரெடிட் கார்டு கிசான் மேளாவின் ஒரு சலுகையாக எஸ்பிஐ வங்கி விவசாயிகளுக்குக் கிசான் கிரெடிட் கார்டு வைத்து இருந்தால் 10 சதவீத கூடுதல் கிரெடிட் அளவை அளிக்க உள்ளது. இதற்காகக் கிசான் கிரெடிட் கார்டு கணக்கை எப்படி விவசாயிகள் புதுப்பிப்பது மற்றும் பிரதான் மந்திரியின் பயிர் காப்பீடு திட்டங்கள் பற்றிய விவரங்கள் எல்லாம் அளிக்கப்பட உள்ளது. கிசான் கிரெடிட் கார்டினை அவ்வப்போது புதுப்பிப்பதன் மூலம் ஏபடும் நன்மை, ரூபே கார்டு பரிவர்த்தனை பயன்பாடு போன்றவற்றைப் போன்ற விழிப்புனர்வுகளை எஸ்பிஐ வங்கி ஏற்படுத்த உள்ளது. பிற திட்டங்கள் இவை மட்டும் இல்லாமல் வங்கிகள் விவசாயிகளுக்காக வழங்கும் சொத்து கடன், விவசாயக் கடன், முத்ரா கடன் மற்றும் விவசாயம் இல்லா பிற கடன் பற்றி எல்லாம் இந்தக் கிசான் மேளாவில் விளக்க உள்ளது.
good news
ReplyDelete