தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜன. 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சணல் பை தயாரிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எளிதில் மட்கும் தன்மை கொண்ட பேப்பர் கப், பேப்பர் பிளேட், துணிப்பைகள் உள்ளிட்ட சிறு தொழில்களில் தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிவகாசியை சேர்ந்த சணல் பை தயாரிப்பாளர் பாலாஜி கூறுகையில், ‘‘இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத சணல் பைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. காய்கறி வாங்குவதற்கு பயன்படும் பைகள், திருமண தாம்பூல பைகள், ஜவுளி கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பைகள், உணவுக் கூடை பைகள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான கைப்பைகள், அலுவலக ஆவணங்கள் வைக்கும் பைல்கள் என 100 வகையான சணல் பைகளை தயாரிக்கிறோம். பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் எழுத்துக்கள், பூக்கள் பதித்து பைகள் தயார் செய்யப்படுகின்றன. சணல் பைகள் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை உழைக்கும். 30 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்ய
Pls give that Balaji's contact number.
ReplyDelete