Saturday, 9 June 2018

1980-90 ல் தமிழகதில் உச்சியில் இருந்த தொழில் பற்றி காண்போம்....

டிஜிட்டல் தொழில்நுட்ப அசாத்திய வளர்ச்சியால் தமிழகத்தில் உள்ள போட்டோக்களை பிரேம் செய்யும் படக்கடைகள் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வருவதால் ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டுவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 1980, 1990களில் உச்சத்தில் இருந்த தொழில்களில் ஒன்று. புகைப்படத்திற்கு பிரேம் போடும் படக்கடை தொழில். வீட்டு விஷேசங்கள், பிறப்பு, இறப்பு, தலைவர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை புகைப்படமாக எடுத்து அதை ஸ்டுடியோவில் கொடுத்து பிரின்ட் எடுத்து படக்கடைகளில் பிரேம் போட்டு வீட்டுக்கு வீடு மாட்டி வைப்பார்கள். இதனால் போட்டோ பிரேம் தொழில் கொடி கட்டி பறந்தது. ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த தொழில் தற்போது முற்றிலும் அழிந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சிறிய நகரங்களில் படக்கடைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் தொழில்நுட்ப வளர்ச்சிதான். தற்போது போட்டோவை செல்போனில் எடுத்து தேவையானவற்றை சேமித்து வைத்துகொள்ளலாம். போட்டோவை பிரின்ட் போட்டு வீட்டில் வைப்பது குறைந்து வருகிறது. திருச்சி, மதுரை, புதுக்கோட்டை கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில் ஒரு சில கடைகள் மட்டுமே உள்ளன. அதுவும் தற்போதைய தொழில்நுட்பதை தாங்கி நிற்பதால் தொழில் தடையில்லாமல் நடக்கிறது. பல ஆண்டுகளாக போட்டோ பிரேம் கடை நடத்தி வருபவர்கள் சிலர் கூறியதாவது: புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்ததால் மக்கள் பழைய தொழில்நுட்பத்தை விரும்பவில்லை. குறிப்பாக மரத்திலான சட்டங்களை கொண்ட பிரேம் செய்து கொடுப்போம். ஆனால் தற்போது பிரேம் செய்ய பல்வேறு வகையான தொழில்நுட்பம் வந்துவிட்டது. பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய ரக பிரேம்கள் சந்தையில் கிடைக்கிறது. பிரேம்கள் கிடைத்தாலும் தற்போது போட்டோவை பிரேம் செய்து வீட்டில் மாட்டுவதை பொதுமக்கள் குறைத்துவிட்டனர். இதனால் தமிழக அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோ பிரேம் செய்யும் படக்கடைகள் மூடிவிட்டனர். இதன் உரிமையாளர்கள் குடும்பத்தை நடத்த வேறுவழியின்றி மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர் என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.