Tuesday, 12 June 2018

அமெரிக்க அதிபர் நமது நாட்டின் வர்த்தக தொடர்வை நிறுத்திக் கொள்ள திட்டமா?

 வாஷிங்டன் : இந்தியா உள்ளிட்ட உலகின் முக்கிய பொருளாதார நாடுகள் அமெரிக்காவின் சில பொருட்களுக்கு 100 சதவிகிதம் வரை இறக்குமதி வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய நாடுகளுடன் வர்த்தக தொடர்பை துண்டிக்க வேண்டிவரும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சிங்கப்பூரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். உலக நாடுகள் அனைத்தும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த பேச்சுவார்த்தையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. முன்னதாக கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகளை உள்ளடக்கிய ஜி7 உச்சி மாநாட்டில் டிரம்ப் கலந்து கொண்டார். கனடாவின் கியூபெக்கில் லமாவ்பே நகரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்ட டிரம்ப், அமெரிக்கா மீது இந்தியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் கூடுதல் வரியை விதிப்பதாக குற்றம் சாட்டினார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டிரம்ப் மேலும் கூறியதாவது: ஜி7 நாடுகளை மட்டும் நான் குறிப்பிடவில்லை. மாறாக, இந்தியாவிலும் எங்களது சில பொருட்களுக்கு 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் எந்த வரியையும் அவர்களது பொருட்களுக்கு விதிப்பதில்லை. இதுகுறித்து நாங்கள் அனைத்து நாடுகளிடமும் பேசிவருகிறோம். இந்த வரிவிதிப்புகள் நிறுத்தப்பட வேண்டும். அல்லது, அவர்களுடன் வர்த்தக உறவை நாங்கள் நிறுத்திக் கொள்வோம். இதுதான் மிகவும் லாபகரமான செயல்பாடாக இருக்கும் என்றார்.....

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.