இந்திய ஜவுளி உற்பத்தியில், ஏற்றுமதி வளர்ச்சி சரிந்து வரும் நிலையில், உள்நாட்டு ஜவுளி வர்த்தகம் ஆண்டுக்கு 10 சதவீதம் உயர்ந்து வருகிறது.இதை வெளிநாட்டினர் கைப்பற்ற களமிறங்கி வருவதால்,அதை தடுக்க உள்நாட்டு தயாரிப்புகளுக்கு தனி கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடை ரகங்கள் ஏற்றுமதியாகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஜவுளி சந்தைகள் மிக குறைவான வளர்ச்சி விகிதத்திலேயே உள்ளன. இந்த நாடுகள் ஆண்டுதோறும் ஒன்று முதல் 2 சதவீத வளர்ச்சியையே அடைகின்றன. இந்நாடுகளுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளும் வங்கதேசம், வியட்நாம், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளோடு இந்தியா கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. இதனால், நம் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக சரிந்து வருகிறது. அதே சமயம் நம்நாட்டின் உள்நாட்டு ஜவுளி சந்தை உலகிலேயே மிக அதிகமாக வளரக்கூடிய சந்தையாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.