சத்துணவு முட்டை சப்ளை தொடக்கம், மற்ற மண்டலங்களில் முட்டை விலை உயர்வு போன்ற காரணங்களால், நாமக்கல் மண்டலத்தில் நேற்று முட்டை விலை 430 காசுகளாக உயர்ந்துள்ளது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 425 காசாக உள்ள முட்டை பண்ணை கொள்முதல் விலை, மேலும் 5 காசு உயர்த்தப்பட்டு, 430 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை உயர்வு, தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பால் சத்துணவு முட்டை சப்ளை தொடக்கம் போன்ற காரணங்களால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்ந்து வருகிறது. அதேபோல், ஒரு கிலோ முட்டைக்கோழி ரூ78க்கும், ஒரு கிலோ கறிக்கோழி ரூ90 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.மற்ற மண்டலங்களில் நேற்று நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை விலை விபரம் (காசுகளில்): ஐதராபாத் - 371, விஜயவாடா - 364, பர்வாலா - 344, மும்பை - 425, மைசூர் - 421, பெங்களூரு - 415, கொல்கத்தா - 412, டெல்லி - 357, சென்னை - 440 காசுகள்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.