Tuesday, 12 June 2018
தங்கப் பத்திரம் வெளியீடு பற்றி அறிவோம்
மத்திய அரசின் சார்பாக தங்கப் பத்திர வெளியீட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1, 5, 10, 50 மற்றும் 100 கிராம் தங்க பத்திரங்கள் வாங்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் ஒரு நிதி ஆண்டில் ஒருவர் அதிகபட்சமாக 500 கிராம் அளவுக்கு தங்க பத்திரங்கள் வாங்கலாம்.
இவற்றின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு பத்திரங்களை ஒப்படைத்து தங்கமாகவே அல்லது பணமாகவோ பெறமுடியும். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.75 சதவிகித வட்டி கிடைக்கும். தங்கப் பத்திரங்கள் வங்கிகள், இந்திய பங்கு விற்பனைக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் (SHCIL), தபால் அலுவலகங்கள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் கிடைக்கும்.
Labels:
guna
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.